“எதிர்பாராததை எதிர்பாருங்கள்” பிக்பாஸில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார் விசித்ரா..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 96வது நாளுக்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது. “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்று கமல் கூறுவதற்கு ஏற்றார் போல இந்த வாரம் முக்கிய போட்டியாளர் ஒருவரை வெளியே அனுப்பி பிக்பாஸ் குழுவினர் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பல கோடி மக்கள் பார்த்து வருகின்றனர். ஆனால் முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு பல விமர்சனங்களும், ட்ரோல்களும் இருக்கிறது என்று சொன்னால் அது இந்த சீசன் தான். குறிப்பாக நடுவராக இருக்கும் கமலஹாசன் மீதும் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

"எதிர்பாராததை எதிர்பாருங்கள்" பிக்பாஸில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார் விசித்ரா..! 1

 

23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது ஏழு பேர் மட்டுமே மீதம் இருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த பணப்பெட்டி டாஸ்க்கில் ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமா வெளியேறி இருந்தார். தற்போது மீதம் அர்ச்சனா, விசித்ரா, மாயா, மணி, தினேஷ், விஷ்ணு, விஜய் வர்மா ஆகிய ஏழு பேர் மட்டுமே போட்டியில் நீடித்து வருகின்றனர். இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகியிருந்த நிலையில் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்புகளில் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டனர். இதனால் மாய மற்றும் பூர்ணிமா இருவரும் வார இறுதியில் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் பூர்ணிமா பணப்பெட்டியுடன் வெளியேறி விட்டதால் முடிவுகள் தலைகீழாக மாறி இருக்கிறது. மாயா மற்றும் விஜய் வர்மா இருவரும் கடைசி இடங்களை பிடித்திருந்த நிலையில் அவர்கள் இருவரும் வெளியேறுவார்கள் என்று பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்து காத்திருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக விசித்ராவை தற்போது எலிமினேட் செய்து பிக் பாஸ் குழுவினர் அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத பிக்பாஸ் ரசிகர்கள் பிக் பாஸை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக மாயாவை காப்பாற்றுவதற்காக தான் விசித்ராவை எலிமினேட் செய்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


நமது தமிழ்க்ளிட்ஸ் இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பு முடிவுகள் பெரும்பாலும் மக்கள் மனங்களையே எ
இத்தனை வருடங்களாக பிரதிபலித்து வந்தது. ஆரம்பம் முதலே மிகத் துல்லியமான முடிவுகளை வழங்கி வருகிறது நமது இணையதளம். ஆனால் கடந்த இரண்டு வாக்கெடுப்பு முடிவுகள் மக்களின் எண்ணத்திற்கு மாறாகவே இருந்து வருகிறது. மக்கள் ஒருவரை வெளியேற்றும் விதத்தில் வாக்களித்து வருகின்றனர். ஆனால் மக்கள் மனங்களுக்கு எதிராகத்தான் பிக் பாஸ் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்