நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் விடுதலை. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி முக்கியாகதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படம் மாபெரும் வெற்றியினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்து இருந்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து உள்ளது. எப்பொழுது இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஏற்கனவே நடிகர் சூரி இந்த ஆண்டு விடுதலை 2 வெளியாகும் என பேட்டிகளில் கூறி இருந்தார். இருந்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் விடுதலை 2 படம் வருகிற டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக ரெடி ஜெயண்ட் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சூரி நாயகனாக நடித்து ஓரே வருடத்தில் வெளியாகும் மூன்றாவது படம் இது. இப்படத்தின் எதிர்பார்ப்பு தற்போது இன்னும் ரசிகர்களிடம் அதிகம் ஆகி இருக்கிறது.