Categories: சினிமா

தனுஷ் குரலில் இளையராஜா இசையில் விடுதலை படத்தில் முதல் சிங்கிள் “உன்னோடு நடந்தா” வெளியானது.!

வெளியிட்டது

வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலான “உன்னோட நடந்தா” என்கிற பாடல் தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகி இருக்கிறது. எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதையான “துணைவன்” என்கிற கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் தான் விடுதலை. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்து வருகிறார். இந்தப்படம் க்ரைம் திரில்லர் ஜேனரில் உருவாகி வருகிறது. ஆர்.எஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் எல்ரடு குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். சூரி உடன் இணைந்து விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சூரி இந்த படத்தில் மறைந்த வீரப்பனை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் எனக் கூறப்பட்டது. ஆனால் விடுதலை படத்திற்கும் வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை இது அனைத்தும் வதந்திகள் என்று பட குழுவினர் அந்த தகவலை மறுத்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனுஷ் குரலில் இளையராஜா இசையில் விடுதலை படத்தில் முதல் சிங்கிள் "உன்னோடு நடந்தா" வெளியானது.! 1
இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ இந்த படத்தில் கதாநாயகியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தில் போலீசாக களம் இறங்க இருக்கிறார். கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பாரதிராஜா உடல் நிலை காரணம் காட்டி படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தற்போது கிஷோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஒரே பாகமாக உருவாக்கப்பட இருந்த இந்த படம் கதையின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இந்த முதல் பாகத்தில் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. உன்னோட நடந்தா என்கிற பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார். இந்த ப்ரோமோ வீடியோக்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.


இதில் இளையராஜா தனுசுக்கு ஒவ்வொரு பாட்டாக சொல்லிக் கொடுக்க அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு பாடுகிறார் தனுஷ். இந்த நிலையில் தற்போது படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த பாடலைக் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்