விடுதலை படத்தில் இருந்து நெஞ்சை நெகிழ வைத்த “காட்டு மல்லி” பாடலின் முழு வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. வெளியான சில நிமிடங்களில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை இந்த பாடல் பெற்று சாதனை படைத்திருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த விடுதலை திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. படம் வெளியாகி 10 நாட்களை கடந்த போதிலும் சக்கை போடு போட்டு வருவதால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கியிருந்தது. முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மலை கிராமத்தில் சுரங்கம் தோண்ட திட்டமிடும் அரசுக்கு எதிராக கிராமத்து மக்கள் போராட்டம் செய்கின்றனர். போராட்டம் ஒரு கட்டத்தில் தீவிரமடைந்து அமைப்பாக மாறுகிறது. அமைதி முறையில் போராடிக் கொண்டிருக்கும் அமைப்பினரை தீவிரவாதிகள் போல காட்ட சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த சூழ்ச்சிக்கு போலீஸ் அதிகாரிகளும் பலியாகின்றனர். பின்னர் என்ன நடந்தது? தீவிரவாத அமைப்பின் தலைவராக இருக்கும் பெருமாள் வாத்தியார் பிடிபட்டாரா..? பிடிபட்ட பின்பு அவர் தப்பித்து சென்றாரா.? என்பது குறித்த கதை தான் இரண்டாம் பாகத்தில் மையக்கருவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதல் பாகத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெற்றது. ஒன்று வழிநெடக காட்டுமல்லி, மற்றொன்று உன்னோடு நடந்தா என்கிற இரண்டு பாடல். இந்த இரண்டு பாடல்களையும் கேஜிஎப் படத்தில் பல பாடல்களை பாடி இருந்த அனன்யா பட் பாடி இருந்தார்.
இசைஞானி இளையராஜா இசையமைத்த வழிநெடுக காட்டுமல்லி பாடல் இளையராஜா குரலிலும், அனன்யா பட்ட குரலிலும் மிக அருமையாக வந்திருந்தது. பலரும் காலை எழுந்த உடனும், இரவு தூங்கச் செல்லும் பொழுதும் இந்த பாடலை கேட்பதாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அது மட்டும் இல்லாமல் நடிகர் தனுஷ் பாடிய உன்னோடு நடந்தா என்னும் பாடலின் பெண் குரலும் அனன்யா பட்டின் உடையது தான். சமீபகாலமாக தென்னிந்தியாவிலிருந்து பிரபலமான பாடகர்கள் உருவாகாத நிலையில், தற்போது அனன்யா பட் பெரிய பாடகராக உருவாகி இருக்கிறார். தமிழில் கே ஜி எஃப் படத்தில் தீரா தீரா, மெகபூபா, கருவினில் என்னை சுமந்து, அகிலம் நீ போன்ற நான்கு பாடல்களை பாடி இருந்தார். இந்த நிலையில் தற்போது விடுதலைப் படத்திலும் இரண்டு பாடல்களை அவர் பாடி தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். தற்போது இந்த பாடலின் முழு வீடியோ பாடல் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: