விடுதலை படத்தின் ரயில் விபத்து காட்சிகள் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை விளக்கி தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காட்சிகளின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினரே தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். மிகவும் கஷ்டப்பட்டு பல தொழில்நுட்ப கலைஞர்கள் உதவியுடன் அந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெய மோகன் எழுதிய துணைவன் என்ற சிறு கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம் தான் விடுதலை. இந்த படம் வெளியாகி 4 நாட்களை கடந்துவிட்ட நிலையில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது இந்த படம். இந்தப் படத்தில் நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஆர் எஸ் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இளையராஜா இசையமைத்திருக்கிறார்.அருமபுரி என்கிற மலைவாழ் கிராமத்தில் மக்களின் எதிர்ப்பை மீறி அங்கு சுரங்கம் அமைப்பதற்காக அரசு முடிவெடுக்கிறது. அப்போது அங்கு பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) தலைமையில் ஒரு குழு மக்கள் படையாக திரள்கிறது. இவர்கள் அரசுக்கு எதிராக சுரங்கம் தோண்டும் திட்டத்தை கைவிடுவதற்காக பல வகையான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி இவர்களை கைது செய்ய பல போலீஸ் படையை அரசு அந்த மலைப்பகுதியில் குவித்து வைக்கிறது. இந்த படையில் கார் டிரைவராக வேலை பார்த்து வரும் சூரி மக்கள் படை தலைவன் விஜய் சேதுபதியை கைது செய்ய பெரும் பங்காற்றுகிறார். பின்னர் என்ன நடந்தது.? விஜய் சேதுபதியை கைது செய்தனரா? அவர் போலீசிடம் இருந்து எப்படி தப்பித்து செல்கிறார் என்பது தான் படத்தின் மீதி கதை. பெரிய ட்விஸ்டுடன் படத்தின் முதல் பாகம் முடிந்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது முதல் பக்கத்தில் இருந்து ரயில் விபத்து எப்படி நடக்கிறது என்பதை மேக்கிங் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தின் காட்சிகள் ஆரம்பிக்கும் போதே ரயில் விபத்துதான் தான் ஆரம்பிக்கும். சுரங்கம் தோண்ட கூடாது என்று போராடும் மக்கள் படை அரசை அச்சுறுத்துவதற்க்காக இப்படி ரயிலை குண்டு வைத்து தகர்த்து விட்டார்கள் என்று தான் கதை ஆரம்பிக்கும் . ஆனால் இப்படியெல்லாம் வீண் பழி சுமத்தி மக்கள் படையை ஒடுக்கி சுரங்கம் தோண்ட பன்னாட்டு நிறுவனத்துக்கு அனுமதி தர வேண்டும் என்பது தான் அரசின் மறைமுக திட்டம். இந்த உண்மைகள் எல்லாம் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியால் உடைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மிகுந்த சிரமப்பட்டு எடுக்கப்பட்ட ரயில் விபத்து காட்சிகளின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sony Music South