தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் தற்போது சுடர் தான் பெற்ற மகள் என்பதை வெற்றி தெரிந்து கொள்கிறார். இந்த தகவல் தெரிந்தவுடன் என் பிள்ளை உயிருடன் தான் இருக்கிறது என்று சொல்லி வெற்றி உடைந்து போய் கதறி அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதையம்சத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்தான் தென்றல் வந்து என்னை தொடும். இந்த தொடரில் நடிகர் வினோத் பாபு வெற்றி என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகனாகவும், நடிகை பவித்ரா அபி என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் பிரபல வக்கீலின் மகளாக இருக்கிறார் அபி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் ஒரு முறை கோவிலில் சாமி கும்பிட சென்றபோது, அங்கு பிரச்சனை செய்து கொண்டிருக்கும் வெற்றியை தட்டி கேட்கிறார். அப்போது வெற்றி அபியின் கழுத்தில் தாலியை கட்டி விடுகிறார். இங்கிருந்து இந்த கதை தொடங்க ஆரம்பிக்கிறது. ஆரம்பத்தில் அபியை ஏற்றுக்கொள்ளாத வெற்றியின் குடும்பம் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அபியை ஏற்றுக்கொண்டனர். இந்த நாடகம் ஓரளவிற்கு முடியும் தருவாயில் இருந்தபோது, கதையில் திடீர் திருப்பமாக வேறு களத்திற்கு மாற்றி இருக்கின்றனர். அதில் வெற்றிக்கும் அபிக்கும் சுடர் என்கிற குழந்தை பிறந்து இருப்பதாகவும், அபி கலெக்டராக மாறியிருப்பதாகவும் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஒரு சம்பவத்தின் போது வெற்றியும் சுடரும் எதேச்சையாக சந்தித்துக் கொள்ள, பின்னர் இருவரும் நண்பர்கள் ஆகிப் போகின்றனர். தனது மகள் என்று தெரியாமல் வெற்றி சுடர் மீது பாசத்தை பொழிந்து கொண்டிருக்கிறார்.

அப்பா வெற்றிதான் என்று தெரியாமல் சுடரும் வெற்றியுடன் நெருங்கி பழகி வருகிறார். தற்போது இவர்கள் இருவரின் பாசத்திற்காகவே இந்த கதையை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். மேலும் வெற்றி தன்னுடைய மகள் தான் சுடர் என்பதை தெரிந்துகொள்ளும் தருணத்திற்காக பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அபியும் சுடரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சுடரை பார்க்க ஓடி வரும் வெற்றியிடம் போலீஸ் சுடர் கலெக்டர் அபியின் மகள் என்ற உண்மையை உடைத்து விடுகிறார். இதனால் வெற்றி தான் பெற்ற மகள் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார். அப்போது மனம் உடைந்து கதறி அழுகிறார் வெற்றி. அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும். Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television