விஜய் டிவியின் இரு முக்கிய நிகழ்ச்சிகள் என்றால் அது பிக் பாஸ்ஸும், குக் வித் கோமாளியும். 5 சீசன்களை கடந்து இப்போது அடுத்த சீசனுக்கான ஒளிபரப்புக்கு ஆயுத்தம் ஆகி வருகிறது அந்த நிகழ்ச்சி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் 2 சீசன் முடித்துள்ளது. 3வது சீசனின் இறுதி சுற்று போட்டிகள் வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாகி உள்ளது. வரும் சீசனில் யார் யார் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் வர இருக்கிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

பல வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி சுற்றிற்கு ஸ்ருதிகா, அம்மு அபிராமி, விதியுலேகா, தர்ஷன் ஆகியோர் முன்னேறியுள்ளனர். இது 3வது சீசன். இரண்டு சீசன்களை மிகவும் வெற்றிகரமாக முடித்துள்ள இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை ரசிகர்கள் தெரிந்துகொள்ள மக்கள் மிகவும் ஆர்வமாக காத்துள்ளனர்.
சென்ற வாரம் விதியுலேகா, கிரேஸ் கருணாஸ், முத்துக்குமார் மூவருக்கும் இடையில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது. இதை பார்த்த ரசிகர்கள் முத்துக்குமார் மேல என்ன கோபம் என்று தெரியவில்லை என்றெல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்கள். இந்த நிலையில் வித்யூலேகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் பதில் அளித்திருக்கிறார்.
அவர் திறமையான குக். பைனலிஸ்ட் ஆக வந்திருக்க வேண்டும் என்று கூட சொன்னேன். கிரேஸ் அக்காவை ஊக்கப்படுத்த தான் நான் அப்படி பேசினேன் என்று கூறியிருந்தார். பிக்பாஸ் வாய்ப்பு வந்தால் போவீங்களா? என்று கேட்டதற்கு ஒரு fun ஷோ குக் வித் கோமாலியிலேயே controversy create பண்ண பாக்குறாங்க. பிக் பாஸ் எல்லாம் போனால் அவ்வளவு தான். வேண்டவே வேண்டாம் நான் நல்லா இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.