100 தடவ கூப்பிட்டோம்.! அவருதான் வரல..அறிவு குறித்து உண்மைகளை போட்டு உடைத்த விக்னேஷ்சிவன்

வெளியிட்டது

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்காக பாடகர் அறிவை பலமுறை அழைத்தோம் என்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஒருங்கிணைத்த இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான ஒரு ஆல்பம் பாடல் தான் என்ஜாயி எஞ்சாமி. இந்தப் பாடலை எழுதி, நடித்து, அதில் பாடியும் இருந்தவர் தெருக்குரல் அறிவு. ஆனால் இந்தப் பாடல் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பாடப்பட்டது. அப்போது ஆல்பம் சாங்கில் பாடிய தீ மற்றும் கர்ணன் படத்தில் கண்டா வர சொல்லுங்க பாடலைப் பாடிய கிடாக்குழி மாரியம்மாள் இருவரும் இணைந்து பாடினர். இது பெரிய சர்ச்சையானது. இந்தப் பாடலை எழுதி, பாடிய அறிவு ஏன் வரவில்லை? என்று பலரும் கேள்வி எழுப்பினர் இந்த நிலையில் அறிவு ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தார். அதில் ஆறு மாத காலமாக தூங்காமல் இந்த பாடலை எழுதியதாகவும், நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது நம்முடைய பொக்கிஷங்களை அபகரித்துக் கொள்வார்கள், உண்மை ஒருநாள் வெல்லும் என்று அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

100 தடவ கூப்பிட்டோம்.! அவருதான் வரல..அறிவு குறித்து உண்மைகளை போட்டு உடைத்த விக்னேஷ்சிவன் 1

அந்தப் பதிவுக்கு பின்னர் சர்ச்சை பூதாகரமானது. வேண்டுமென்றே அறிவை புறக்கணித்து விட்டதாக நெட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வந்தனர். இது குறித்து தீயின் தந்தையும் என்ஜாய் என் சாமி பாடலுக்கு இசையமைத்தவருமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒரு விளக்கம் அளித்து இருந்தார். அதில் இந்தப் பாடலின் மூலம் வந்த வருமானத்தை நாங்கள் மூவரும் சமமாக பங்கிட்டு கொண்டதாகவும், அறிவு ஒரு நல்ல கலைஞர் எனவும், வாங்கோ வாங்கோ ஒன்னாகி என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் பாடகி தீயும் ஒரு விளக்கம் அளித்து இருந்தார். அதில் அறிவு வெளிநாட்டில் இருந்ததால்தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டதாகவும், அறிவு எப்பொழுதுமே முன்னுக்கு வரவேண்டும், ஜெயிக்க வேண்டும் என்று நான் எல்லா இடத்திலும் கிடைத்த வாய்ப்பின் போதெல்லாம் பதிவு செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

 

இந்த நிலையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைத்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய விளக்கத்தையும் அளித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். விக்னேஷ் சிவன் கூறும் பொழுது, அறிவு செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க ஒன்றுக்கு பல தடவை அவரை அழைத்தோம். ஆனால் அவர் வெளிநாட்டில் இருந்ததால் பங்கேற்க முடியாது என்று கூறினார். இருந்தாலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் வெளிநாடு திரும்புவதற்கு ஏற்பாடுகளை செய்து தருகிறோம் என்று கூறினோம். ஆனால் அவரால் வர முடியவில்லை. மேலும் தானும் அறிவின் ரசிகன் தான், அவர் திறமைசாலி எனவே அப்பாடலில் அறிவு இடத்தில் மாற்றாக நாங்கள் யாரையும் பயன்படுத்தவில்லை. எங்கள் நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவுக்கும், அறிவுக்கும் எந்த கருத்து வேறுபாடு இல்லை என்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் பேசிய வீடியோவை நீங்களும் காண.. watch the below video..

Youtube Video Code Embed Credits: Newsglitz Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்