Categories: சினிமா

லவ் டுடே நாயகனுடன் கை கோர்த்த விக்னேஷ் சிவன்.! வீடியோவில் சூசக அறிவிப்பு.!

வெளியிட்டது

‘போடா போடி’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பின்னர் இவர் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவன் கடைசியாக 2022ம் ஆண்டு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தை இயக்கி இருந்தார். அடுத்ததாக அஜித் குமாரை வைத்து அடுத்த படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது.

லவ் டுடே நாயகனுடன் கை கோர்த்த விக்னேஷ் சிவன்.! வீடியோவில் சூசக அறிவிப்பு.! 1

ஆரம்பத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன், அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் கதை பிடிக்காத காரணம் போன்றவற்றால் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். தற்போது மகிழ் திருமேனி ‘விடாமுயற்சி’ படத்தை இயக்க இருப்பதை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து பணிகளை தொடங்கி இருக்கின்றனர். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும், இசையமைப்பாளராக அனிருத்தும் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போது எந்த படத்தில் வரும் கமிட் ஆகாமல் இருந்து வரும் விக்னேஷ் சிவன், தற்போது விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். லவ் டுடே படத்தின் மூலமாக பிரபலமான பிரதீப் ரங்கநாதனுக்கு டேட்ஸ் கொடுப்பது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதாவது பிறந்தநாளில் பிரதீப் தனக்கு தேதி கொடுத்துள்ளதைத் தான் இப்படி சூசகமாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்டில் கருத்து தெரிவித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதை வீடியோவாக வெளியிட்டு விக்னேஷ் சிவன் உறுதி செய்து இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்