“பயம், பதட்டம், சஸ்பென்ஸ்”!! அடுத்தடுத்து என்ன நிகழ போகிறது என ஆர்வத்தை தூண்டும் “சூழல்” தொடரின் ட்ரைலர்!!!

ஆரம்பத்தில் சிறு சிறு படங்கள் நடித்தாலும் நடுவில் வெளியான “மத யானைக்கூட்டம்” படம் நடிகர் கதிருக்கு ஒரு நல்ல பெயரை கொடுத்தது. அதன் பின்னர் இவர் நடிப்பில், பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய “பரியேறும் பெருமாள்” படம் நடிகர் கதிருக்கு தமிழ் திரையுலகில் மிக பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அந்த பின் சில படங்கள் அவருக்கு சறுக்கினாலும் இப்பொது அமேசான் ப்ரேம் OTT தளத்தில் இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் “சூழல்” என்னும் வெப் சீரிஸை பாலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"பயம், பதட்டம், சஸ்பென்ஸ்"!! அடுத்தடுத்து என்ன நிகழ போகிறது என ஆர்வத்தை தூண்டும் "சூழல்" தொடரின் ட்ரைலர்!!! 1

விளம்பரம்

தமிழில் ‘ஓரம் போ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து, ‘வ – குவாட்டர் கட்டிங்’, ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களை இயக்கியுள்ளனர். ‘விக்ரம் வேதா’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் கவனம் பெற்ற இந்த தம்பதியினர் அடுத்ததாக ‘சுழல்’ என்ற இணையத் தொடருக்கு திரைக்கதை எழுதியுள்ளனர். இதில் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா, கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொடர்புடையவை  என்னை கைவிட மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்.! சமந்தாவுக்கு நடந்த ஹாப்பி மொமெண்ட்ஸ்.!

"பயம், பதட்டம், சஸ்பென்ஸ்"!! அடுத்தடுத்து என்ன நிகழ போகிறது என ஆர்வத்தை தூண்டும் "சூழல்" தொடரின் ட்ரைலர்!!! 3

விளம்பரம்

தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 17-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

"பயம், பதட்டம், சஸ்பென்ஸ்"!! அடுத்தடுத்து என்ன நிகழ போகிறது என ஆர்வத்தை தூண்டும் "சூழல்" தொடரின் ட்ரைலர்!!! 5

விளம்பரம்

ட்ரெய்லரை பொறுத்தவரை, இந்த வெப்சீரிஸ் ஒரு க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. காணாமல் போன தனது தங்கையை தேடி அலைந்துகொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரைத் தேடும் காவல்துறை அதிகாரியாக கதிர் நடித்திருக்கிறார்.

"பயம், பதட்டம், சஸ்பென்ஸ்"!! அடுத்தடுத்து என்ன நிகழ போகிறது என ஆர்வத்தை தூண்டும் "சூழல்" தொடரின் ட்ரைலர்!!! 7

விளம்பரம்

இதனிடையே தொழிற்சாலை மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்களின் போராட்டம் என்ற கிளைக் கதையும் முன்னெடுக்கப்படுகிறது. விறுவிறுப்பாக கட் செய்யப்பட்டிருக்கும் இந்த ட்ரெய்லரில், ‘இந்த உலகத்த பத்தி உனக்கு எல்லாம் தெரியும் நெனைச்சேன். இங்க இருக்குற மனுசங்க அவ்ளோ சிம்பிளாவோ, ஈஸியாவோ இல்ல’ போன்ற வசனமும், ட்ரெய்லர் முழுக்க பின்னணியில் ஒளிக்கும் வசனமும் கவனம் ஈர்க்கிறது.

விளம்பரம்

Video Courtesy – AmazonPrimeVideo

விளம்பரம்

Leave a Comment