Categories: சினிமா

தல அஜித்துடன் கோபமா? புகைப்படத்தை பகிர்ந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்.!

வெளியிட்டது

தல அஜித் மீது விக்னேஷ் சிவன் கோபமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கி விட்டதால் விக்னேஷ் சிவன் செம அப்சட்டில் இருப்பதால் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். நடிகர் அஜித்தின் துணிவு படத்திற்கு பின்னர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே 62 படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருந்தார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும், அரவிந்த்சாமி, சந்தானம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தது. கிரீடம் பில்லா படங்களுக்கு பின்னர் அஜித்தும் சந்தானமும் இணைய இருப்பதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

தல அஜித்துடன் கோபமா? புகைப்படத்தை பகிர்ந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்.! 1
மேலும் ஏகே 62 படத்தின் டிஜிட்டல் ஓடிடி ஒளிபரப்பு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃப்லிக்ஸ் கைப்பற்றி இருந்தது. இதை அந்த நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் இந்த டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் எழுதிய கதை பிடிக்கவில்லை என்றும், அதனால் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகி விட்டதாகவும் மகிழ்த்திருமேனி அந்த படத்தில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இது குறித்து அஜித், விக்னேஷ் சிவன், லைகா தயாரிப்பு நிறுவனம், மகிழ் திருமேனி என யாருமே எந்தவிதமான கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருந்து வந்தனர். வதந்திகள் கொடி கட்டி பறந்த நிலையில் விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் பயோவில் இருந்த “ஏகே 62 இயக்குனர்” என்ற வாசகத்தை நீக்கினார். மேலும் கவர் பிக்கில் இருந்த அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் மாற்றினார்.

இதையடுத்து விக்னேஷ் சிவன் ஏகே 62 வில் இருந்து விலகி விட்டதை சூசசமாக அறிவித்து விட்டார் என்று நெட்டிசன்கள் தகவல்களை பரப்ப தொடங்கினர். மேலும் அஜித் மீது விக்னேஷ் சிவன் கோபமாக இருப்பதாகவும் தகவல்களைப் பரப்பினர். ஆனால் இதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் விக்னேஷ் சிவன் தற்போது தனது instagram பக்கத்தில் அஜித்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ஹார்ட்டின் எமோஜி உடன் பதிவிட்டு இருந்தார். சமீபத்தில் எடுத்த அந்த புகைப்படத்தை பகிர்ந்ததன் மூலமாக விக்னேஷ் சிவன் அஜித் மோதல் என்கிற சர்ச்சைகளுக்கு எல்லாம் அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். படத்திலிருந்து விலகியது உண்மைதான் என்று போதிலும் தனக்கும் தல அஜித்துக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்