Categories: சினிமா

வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியானது விஜய் ஆண்டனியின் “கொலை” ட்ரைலர்.!

வெளியிட்டது

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வரும் கொலை படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. வெளியான சில நிமிடங்களில் பல லட்சம் பார்வையாளர்களை பெற்று இந்த ட்ரைலர் சாதனை படைத்திருக்கிறது. இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் தமிழின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. மேலும் பல படங்களுக்கு இசையமைத்தும் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சில படங்களிலும் பாடல்களிலும் சிறப்பு தோற்றத்தில் வந்து கொண்டிருந்த விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான நான் என்கிற படத்தின் மூலமாக நடிகராக அவதாரம் எடுத்தார். முதல் படமே மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த நிலையில் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், அண்ணாதுரை, காளி, டிராபிக் ராமசாமி, கொலைகாரன், கோடியில் ஒருவன் தமிழரசன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியானது விஜய் ஆண்டனியின் "கொலை" ட்ரைலர்.! 1
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் கைவசம் தற்போது கொலை, அக்னி சிறகுகள், ரத்தம், மழைப் பிடிக்காத மனிதன், வள்ளி மயில் என ஆறு படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார். இதில் அக்னி சிறகுகள் படம் தாமதமாகி கொண்டிருக்கும் நிலையில், கொலை படம் முடிந்து வெளியீட்டிற்க்கு தயாராகி இருக்கிறது. மேலும் ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் போன்ற திரைப்படங்கள் படப்பிடிப்புகளிலேயே இருக்கிறது. இந்த நிலையில் கொலை படத்திலிருந்து தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பாலாஜி கே குமார் என்பவர் இயக்க கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா, கிஷோர் குமார், ஜான்விஜய் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்திருக்கின்றனர்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. கமல் போகரா மற்றும் தனஞ்செயன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர். இந்த படம் வருகிற ஜூலை 21ம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது விஜய் ஆண்டனி துப்பறியும் ஒரு நபராக வருகிறார், அவருடன் உதவியாளராக ரித்திகா சிங் வருகிறார். இருவரும் பூட்டி இருந்த வீட்டுக்குள் இறந்து கிடக்கும் ஒரு பெண்மணி பற்றிய கேஸை கையில் எடுத்து விசாரணையை தொடங்குகின்றனர். பிறகு என்ன நடந்தது என்கிற சுவாரசியத்துடன் டிரைலர் நகர்கிறது.! நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்