இதுக்கு அந்த மாதிரி இருந்துட்டு போய்டலாம்.! டைமிங் பார்த்து விக்ரமனை தாக்கிய பிக்பாஸ் தனலட்சுமி.!

விக்ரமன் மற்றும் அவரது காதலி கிருபா முனுசாமி என்பவரின் பிரச்சனை பூதாகரமாகி வரும் நிலையில், தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிக்பாஸில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்த தனலட்சுமி ஒரு பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறார். அது மறைமுகமாக விக்ரமனை தாக்கி போடப்பட்டதாக தற்போது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பிக்பாஸில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் விக்ரமன். மேலும் விடுதலை சிறுத்தைகள் என்ற கட்சியில் மாநில செய்தி தொடர்பாளர்களாகவும் இருந்தார். விக்ரமனுக்கு அந்த கட்சியின் தலைவர் ஆதரவு கேட்ட போதிலும் அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது. இந்த நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் முதல் முறையாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் விக்ரமன்.

இதுக்கு அந்த மாதிரி இருந்துட்டு போய்டலாம்.! டைமிங் பார்த்து விக்ரமனை தாக்கிய பிக்பாஸ் தனலட்சுமி.! 1

விளம்பரம்

விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருபா முனுசாமி என்கிற பெண்மணி சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்கள் பலவற்றை பகிர்ந்து புகார் கூறியிருந்தார்.மேலும் சமூக வலைத்தளங்களில் உரையாடிய உரையாடல்களையும், வீடியோ கால் பேசிய ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் பகிர்ந்திருந்தார். மேலும் தன்னிடம் நிறைய பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த விக்ரமன் தான் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இப்படி தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார் எனவும், பிக்பாஸிலிருந்து வெளியே வந்த உடனேயே 12 லட்சம் ரூபாயை அவர் கணக்கில் செலுத்தியதற்கான ஆதாரத்தையும் விக்ரமன் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் பிக்பாஸில் விக்ரமனுக்கு எதிரான போட்டியாளராக இருந்த தனலட்சுமி தற்போது ஒரு பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறார்.

தொடர்புடையவை  அப்பாவுக்கு உதவி செய்ய பொம்மை தொழிலில் இறங்கிய மஹா.! வீடியோ எடுத்து வெளியிட்ட விஷமிகள்.!

இதுக்கு அந்த மாதிரி இருந்துட்டு போய்டலாம்.! டைமிங் பார்த்து விக்ரமனை தாக்கிய பிக்பாஸ் தனலட்சுமி.! 3

விளம்பரம்

அதில் அவர், “கலப்படமான நல்லவனாக இருப்பதைவிட சுத்தமான கெட்டவனாக இருந்துட்டு போயிரலாம்” Just Post”, என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த பலரும் விக்ரமனை தாக்கித்தான் தனலட்சுமி இவ்வாறு பதிவிட்டு இருப்பதாக கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸில் இருந்த போது ஆரம்பத்தில் விக்ரமன் தனலட்சுமிக்காக பல தடவை பேசி இருந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தனலட்சுமியும் அசீமும் சேர்ந்து கொண்டு விக்ரமனை எதிர்த்தனர் குறிப்பாக பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் அசீமின் தீவிர ஆதரவாளராக மாறி இருந்தார் தனலட்சுமி. இந்த நிலையில் நேற்று அசீம், நீ விதைத்த வினை எல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் என்று பதிவிட்டது போல தனலட்சுமியும் விக்ரமனை மறைமுகமாக கலாய்ப்பது போல பதிவிட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.!

 

View this post on Instagram

 

A post shared by dhanalakshmi B (@dhanalakshmioffl_)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment