Categories: சினிமா

விஜய் ஆண்டனியின் செம்ம திரில்லிங்கான நடிப்பில் “ர த் த ம்” படத்தின் டீஸர் வெளியானது.!

வெளியிட்டது

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் பல முன்னணி இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் வந்து பேசியிருக்கின்றனர். தமிழ் படத்தை இயக்கிய சி எஸ் அமுதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ரத்தம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்கிற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் 2012 ஆம் ஆண்டு வெளியான நான் என்கிற படத்தின் மூலமாக நடிகராக அவதாரம் எடுத்தார். அதற்குப் பிறகு இவர் சலீம், பிச்சைக்காரன், சைத்தான், கொலைகாரன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் கைவசம் ஆறு படங்களில் நடித்து வருகிறார். கீழே உள்ள டீசர் வீடியோவை பார்க்கவும்.

விஜய் ஆண்டனியின் செம்ம திரில்லிங்கான நடிப்பில் "ர த் த ம்" படத்தின் டீஸர் வெளியானது.! 1

தமிழரசன், வள்ளி மயில், அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் அக்னி சிறகுகள் மற்றும் தமிழரசன் படங்கள் சூட்டிங் முடிந்து விட்டது. ஆனால் வெளியீடு தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது ரத்தம் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர். படத்தின் படிப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் டீசரில் முன்னணி இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். வெற்றிமாறன், பா ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகியோர் டீசரில் இடம் பெற்றிருக்கின்றனர்.


இந்தப் படத்திற்கு கண்ணன் நாராயணன் என்பவர் இசை அமைக்கிறார். இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. த்ரில்லர், ஆக்ஷன் கலந்த காட்சிகளுடன் இந்த டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த டீசரை காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

Youtube Video Code Embed Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்