நடிகர் விஜய் ஆண்டனி நாடகக் கலைஞர்களுடன் இணைந்து செம்ம குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இசையமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது முண்ணனி நடிகராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் 2012ம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் சலீம், பிச்சைக்காரன், சைத்தான், அண்ணாதுரை போன்ற பல படங்களில் நடித்து மக்களில் மனங்களில் இடம் பிடித்தார். தற்போது கைவசம் பல படங்களில் நடித்து வருகிறார். பிச்சைக்காரன் 2, வள்ளிமயில், கொலை, ரத்தம், அக்னி சிறகுகள், காக்கி, மழை பிடிக்காத மனிதன் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். முண்ணனி நடிகர்கள் கூட இவ்வளவு படங்களை கைவசம் வைத்திருக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனியின் எதார்த்தமான நடிப்பு பலருக்கும் பிடித்து போயுள்ளது. அதனால் தான் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்த நிலையில் புதுச்சேரி நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 100 வது ஆண்டு நினைவு நாளையொட்டி நாடகக்கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு நடனமாடி, நாடக கலைஞர்களை உற்சாகப்படுத்தினார். நாடகத் துறையில் பெரும் பங்காற்றியவர் சங்கரதாஸ் சுவாமிகள். 24 வயதில் தான் பார்த்து வந்த வேலையை விட்டு நாடகத் துறையில் களம் இறங்கினார். நாடகம் தொடர்பாக சுமார் 40க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
அவரின் நினைவு நாள் கூட்டங்கள் ஆண்டுதோறும் நாடகக்கலைஞர்களால் சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. இன்று அவரின் 100வது நினைவு ஊர்வலம் புதுச்சேரியில் நடத்தப்பட்டது. அந்ழ ஊர்வலத்தில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி நாடக கலைஞர்களுடன் சேர்ந்து செம்ம் குத்தாட்டம் போட்டார். அவரின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7