சன் பிக்சர்ஸை விஜய் ஜேசுதாஸ் கேள்வி கேட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழின் முண்ணனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் ஹாலிவுட் படங்கள் வரை நடித்து முடித்துவிட்டார். ஆரம்பத்தில் உருவக்கேலி செய்யப்பட்ட இவர், பின்னாளில் திறமையை வளர்த்துக் கொண்டு தற்போது முண்ணனி நடிகராக வலம் வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் திருச்சிற்றம்பலம், இந்த படம் 100 கோடி வசூலை பெற்று இருந்ததாக தகவல்கள் வெளியானது. மேலும் நானே வருவேன், கேப்டன் மில்லர், வாத்தி என படங்கள் வரிசை கட்டி இருக்கிறது. இதில் திருச்சிற்றம்பலம் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஜவஹர் மித்ரன் இயக்கி இருந்தார்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி இரண்டு வாரம் ஆன போதிலும் இன்று வரை ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக மேகம் கருக்காதா, தாய் கிழவி பாடல்களுக்கு பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்தனர். மற்ற இரண்டு பாடல்களும் ரிப்பீட் மோடில் அனைவரும் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் படக்குழு நேற்று ‘கண்ணீர் சிந்த’ என்ற பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். இந்தப் பாடலின் ப்ரோமோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று தனது instagram பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. அப்போது அதில் நடித்த நடிகர்கள், இயக்குனர், இசையமைப்பாளர் பெயர்கள் அனைவரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பாட்டைப் பாடிய பிரபல பாடகரும் நடிகருமான விஜய் ஜேசுதாஸ் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதனால் கடுப்பான விஜய் யேசுதாஸ் எல்லார் பெயரையும் போடுவீங்க, ஆனால் அந்த சிங்கர் பெயரை மட்டும் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார். அவரை அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி இருக்கிறது.
View this post on Instagram