“என் மகனுக்கு ஓட்டு போடப் போறேன்.! வாகை சூடி வா மகனே.!” நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய தாய் ஷோபா.!

வெளியிட்டது

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் இன்று தனது கட்சியை தொடங்குவதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பலரிடமிருந்தும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், விஜயின் தாயார் சோபா தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் தன்னது மகனை வாகை சூடி வருமாறு கூறியிருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"என் மகனுக்கு ஓட்டு போடப் போறேன்.! வாகை சூடி வா மகனே.!" நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய தாய் ஷோபா.! 1
அதில் பேசிய அவர், தனது மகனின் அரசியல் வருகை குறித்து ஒரு அம்மாவாக மட்டுமின்றி சமூக கடமை உள்ள ஒரு பெண்மணி ஆகவும் பதில் சொல்லப் போகிறேன். எனக்கு அரசியல் தெரியாது என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொரு குடிமகனும் அரசியல் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக விஜய் போன்ற ஆளுமை உள்ளவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். புயலுக்குப் பின் தான் அமைதி என்று சொல்வார்கள். ஆனால் விஜயின் அமைதிக்கு பின் தான் ஒரு புரட்சி ஏற்படப் போகிறது. விஜயின் ரசிகர்கள் தற்போது அவரது கட்சியின் தொண்டர்களாக மாற இருக்கின்றனர்.


விரைவில் இந்தத் தொண்டர்கள் அனைவரும் தலைவர்களாகவும் மாறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு குடிமகனாக மட்டுமின்றி அம்மாவாகவும் விஜய்க்கு ஓட்டு போட எதிர்பார்த்து காத்திருக்கிறேன். விஜய்க்கு நான் சொல்ல வேண்டியது எதுவும் கிடையாது. அவருக்கே எல்லாமே தெரியும். “வெற்றி வாகை சூடி வா விஜய்” என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரின் இந்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Thanthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்