“ஸ்டாலினை கைது செய்யும் விஜய்” இணையத்தில் வைரலாகும் வீடியோ.! ‘முதல்வன்’ படக்காட்சியை எடிட் செய்த விஜய் ரசிகர்கள்

திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது “தமிழக வெற்றி கழகம்” என்கிற புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார். விரைவில் இந்த கட்சி தேர்தலில் ஈடுபடவும் இருக்கிறது. வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய் தனது கட்சியை தொடங்கியிருக்கிறார். “தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இந்த கட்சியை தமிழர்கள் நலனுக்காகவும் ஊழலற்ற சாதி மத பேதம் அற்ற ஆட்சியை வழங்க இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அரசியல் தனக்கு பொழுதுபோக்கல்ல, அது தன்னுடைய வேட்கை” என்றும் அவர் கூறியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"ஸ்டாலினை கைது செய்யும் விஜய்" இணையத்தில் வைரலாகும் வீடியோ.! 'முதல்வன்' படக்காட்சியை எடிட் செய்த விஜய் ரசிகர்கள் 1
இந்த நிலையில் விஜயின் அரசியல் வருகை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், அதற்கு உரிமை இருக்கிறது, எனவே விஜயின் அரசியல் வருகையை வரவேற்கிறேன்” எனக் கூறியிருந்தார். ஆனால் அதிமுக இன்னும் எந்த கருத்தையும் சொல்லாமல் மௌனம் சாதித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் ‘முதல்வன்’ பட வீடியோவை எடிட் செய்து இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  தொடங்கியது விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள்..! வெளியாகிய புகைப்படங்கள்..!

"ஸ்டாலினை கைது செய்யும் விஜய்" இணையத்தில் வைரலாகும் வீடியோ.! 'முதல்வன்' படக்காட்சியை எடிட் செய்த விஜய் ரசிகர்கள் 3 "ஸ்டாலினை கைது செய்யும் விஜய்" இணையத்தில் வைரலாகும் வீடியோ.! 'முதல்வன்' படக்காட்சியை எடிட் செய்த விஜய் ரசிகர்கள் 5 "ஸ்டாலினை கைது செய்யும் விஜய்" இணையத்தில் வைரலாகும் வீடியோ.! 'முதல்வன்' படக்காட்சியை எடிட் செய்த விஜய் ரசிகர்கள் 7
அதில் அர்ஜுன் முகத்தில் விஜயின் முகத்தை வைத்தும், ரகுவரன் முகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முகத்தை வைத்தும் எடிட் செய்திருக்கின்றனர். அதில் அர்ஜுன் ரகுவரனை கைது செய்யும் காட்சியை முகத்தை மாற்றி எடிட் செய்திருக்கும் நெட்டிசன்கள், ஸ்டாலினை விஜய் கைது செய்வது போன்ற காட்சியை உருவாக்கி இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment