தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் தளபதி விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. நூறு கோடி வசூல் என்பது நடிகர் விஜயின் படங்களுக்கு ஒரு நாள் மொத்த வசூல் ஆகும். அந்தளவுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை கொண்டு தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில் இருப்பவர் விஜய். தற்போது இவர் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளதால் , ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு வெளியேற உள்ளார்.

இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் கவலையை கொடுத்து இருக்கிறது. அடுத்து இவர் நடிப்பில் கோட் படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. அடுத்த மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் விஜய்யின் கோட் படம் வெளியாக இருக்கிறது. ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
அதே சமயம் இப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை 5மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் பாடலாசிரியர் விவேக் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.