Categories: சினிமா

“என் லட்சுமியை காணோம் சார்”.! விஜய் சேதுபதியின் 50வது படம் ‘மஹாராஜா’ ட்ரைலர் வெளியானது.!

வெளியிட்டது

விஜய் சேதுபதி நடித்து வரும் ஐம்பதாவது படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்தவீடியோவிற்கு தற்போது பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் குழு நடிகராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, இன்று தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். பல படங்களில் வில்லனாகவும் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் அவர் தற்போது தனது ஐம்பதாவது திரைப்படமாக ‘மகாராஜா’ என்கிற படத்தில் நடித்து முடித்திக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"என் லட்சுமியை காணோம் சார்".! விஜய் சேதுபதியின் 50வது படம் 'மஹாராஜா' ட்ரைலர் வெளியானது.! 1

விஜய் சேதுபதியின் 50வது திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். 2017ம் ஆண்டு விதார்த், பாரதிராஜா போன்ற பலரின் நடிப்பில் வெளியான ‘குரங்கு பொம்மை’ என்கிற படத்தை இயக்கியவர் தான் நித்திலன் சுவாமிநாதன். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் ஆறு ஆண்டுகள் கழித்து முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அதில் முடி திருத்தம் செய்யும் கடையில் கையில் பட்டாகத்தி உடன் காதில் இரத்தம் ஒழுக அமர்ந்திருப்பது போலவும், அந்த கட்டிடம் உடைந்து இருக்கிறது அவருக்கு பின்னால் போலீசார் நின்று கொண்டிருப்பது போலவும் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவை பார்க்க.! கீழே கொடுக்கப்பட்டுள் வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.! 

Youtube Video Embed Code Credits: Junglee Music Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்