Categories: சினிமா

புறநானூற்று பாடலை படத்தின் தலைப்பாக மாற்றினார் விஜய் சேதுபதி!!

வெளியிட்டது
புறநானூற்று பாடலை படத்தின் தலைப்பாக மாற்றினார் விஜய் சேதுபதி!! 1

கோலிவுட்டில் ஒரு வருடத்தில் 8 லிருந்து 10 படங்கள் வரை நடித்து வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என்று தனக்கு வழங்கப்பட்ட அனைத்து கதாபாத்திரத்தையும் கச்சிதமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள சங்க தமிழன் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது விஜய் சேதுபதி தற்போது வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை அப்படத்தை தயாரிக்கிறது.

மேலும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று வரி கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று பாடலில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார் . நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இதில் மகிழ் திருமேனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

விஜய் சேதுபதி தற்போது ஜெனநாதன் இயக்கும் லாபம், லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் வில்லன், தெலுங்கு படங்கள், அல்லு அர்ஜுனுக்கு வில்லன் என்று கடும் பிஸியாக நடிக்கிறார்.இது தவிர மணிரத்தினம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்