
பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்ற பல மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான தாயின் மடியில், பணம் படைத்தவன், என் எண்ணன், தெய்வத்தின் தெய்வம் என்று பல படங்களில் நடித்தவர் நடிகை கீதாஞ்சலி. தமிழில் இவரது நடிப்பில் வந்த கடைசி படம் கங்கா கௌரி. தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர், தெலுங்கு நடிகர் ராமகிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்
கடைசியாக தமன்னா நடிப்பில் வெளியான தெட் இஸ் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்தார். கீதாஞ்சலிக்கு ஆதித் ஸ்ரீனிவாஸ் என்ற மகன் உள்ளார். கீதாஞ்சலியின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.