தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய். இவருக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளமே இறுகியது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ் சினிமாவின் வசூல் சக்கவாதி தளபதி விஜய் தான் என்ற பட்டமே ரசிகர்கள் இவருக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது தளபதி விஜய் தளபதி 65 படமான beast படத்தில் நடித்து வருகிறார். இந்த

படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க sun pictures நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் செல்வராகவன் , யோகிபாபு , vtv கணேஷ் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் நடிப்பது , நடனமாடுவது மட்டுமல்ல பாட்டு பாடுவதிலும் திறன் பெற்றவர்.
தற்போது யுவன் இசையில் விஜய் பாடிய செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாசர் நடிப்பில் வெளிவந்த வேலை என்ற படத்தில் யுவன் இசையில் விஜய் காலத்துக்கேத்த கானா என்ற பாடலை பாடியிருப்பார். இந்த பாடலை யுவன் , விஜய் தான் பாடவேண்டும் என்று அடம்பிடித்து பாடவைத்தாராம். தற்போது இந்த செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.