Categories: சினிமா

பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக தமிழ் சினிமாவில் விளங்கும் தளபதி விஜய்!

வெளியிட்டது
பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக தமிழ் சினிமாவில் விளங்கும் தளபதி விஜய்! 1

தமிழ் திரையுலகில் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாகவும் நேர்மையாகவும் எடுத்து வைக்கும் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக மக்களை ஈர்த்திருக்கிறார் நடிகர் விஜய். போட்டிகள் நிறைந்த களம் சினிமா, இதில் நிலைத்து நிற்க அதிகம் போராட வேண்டும் என்பது அவசியம். மக்களிடம் ஒரு படத்திற்கு கிடைக்கும் ஆதரவை தொடர்ந்து அடுத்த படத்திற்கு தக்கவைத்துக்கொள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்பதை விஜய் உணர்ந்தே இருக்கிறார். அதற்கேற்றவாறே சினிமா என்கிற சதுரங்க விளையாட்டை மிக கூர்மையாக காய்களை நகர்த்தி சதுரங்க விளையாட்டை விளையாடி வருகிறார்.

கதைகளை கவனமாக தேர்தெடுத்து நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த விஜய்க்கு, விஜய் நடித்தாலே போதும் கதையை பற்றி அப்புறம் போசுவோம் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் செல்வாக்கை வளர்த்துக்கொண்டுள்ளார் என்று சொன்னால் அது மிகை இல்லை. கடுமையான உழைப்பும், எளிமையையும் அவரது வெற்றிக்கு படிகற்களாக இருந்து வருகிறது.

ஒரு படத்தின் வெற்றி என்பது பெரும்பாலும் அதன் வணிக லாபத்தை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தொடர்ந்து விஜய் நடிப்பில் ஆண்டுக்கு ஒரு படம் என வெளியாகி பல கோடி ரூபாய் லாபம் ஈட்டி சாதனை படைத்து வருகிறது. கடந்த காலங்களில் வெளியான மெர்சல், சர்கார் உள்ளிட்ட படங்கள் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது இந்த படங்களைப்போலவே தற்போது அட்லி இயக்கத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘பிகில்’ படமும் 200 கோடியை கடந்து வசூல் சாதனைப்படைத்து வருகிறது.

தமிழ் சினிமாவிலே பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து, நடித்த மூன்று படங்களும் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்கிற பெருமையை நடிகர் விஜய் பெற்று தமிழ் சினிமாவில் இன்னொரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்