விஜய் தொலைக்காட்சி தற்போது தவறு நடந்து விட்டதாகவும் அதற்கு மன்னிப்பு தெரிவித்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த பதிவில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு விஜய் டிவி புதிய பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறது. தமிழ் திரையுலகின் டாப் தொலைக்காட்சியாக இருக்கிறது விஜய் தொலைக்காட்சி. பிக்பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், நீயா நானா போன்ற பல ரியாலிட்டி ஷோக்களையும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ஈரமான ரோஜாவே, சிறகடிக்க ஆசை போன்ற பல சீரியல்களையும் ஒளிபரப்பி வருகிறது. இதில் சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கிறது.

தொடர்ந்து பல சீரியல்களை ஒளிபரப்பி வரும் இந்த சேனல் அவ்வப்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருவதும் குறிப்பிடப்பட்டது. சமீபத்தில் கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் குழந்தைகள் வைத்திருக்கும் பையில் குழந்தைகள் இல்லாமல் பேட்டரி பேனை வைத்து ரசிகர்களை ஏமாற்றி வந்ததை ரசிகர்கள் பலரும் இதை விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் அடுத்தபடியாக தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதில் ஈரமான ரோஜாவே சீரியலின் நேற்றைய முன் தினம் ஒளிபரப்பான எபிசோடை நேற்றும் ஒளிபரப்பில் அதிர்ச்சி கொடுத்திருந்தனர். சீரியலை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஒரே எபிசோடை இரண்டு நாட்களாக ஒளிபரப்பி வருகிறார்களே என்கிற அதிர்ச்சியில் விஜய் தொலைக்காட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
தற்போது இது குறித்து தன் உங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் விஜய் தொலைக்காட்சி, “தாமதத்திற்கு வருந்துகிறோம், நேற்றைய ஈரமான ரோஜாவே சீரியலின் பகுதி இன்று ஒளிபரப்பாகும்” என்று மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறது. விஜய் டிவி வரலாற்றில் இது போன்ற ஒரு சம்பவம் முன்பு எப்போதும் நடந்ததில்லை, எபிசோடுகளை மாற்றி ஒளிபரப்பியதாக இதுவரை சரித்திரமே கிடையாது. முதல் முறையாக இது போன்ற குளறுபடி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.