விஜய் தொலைக்காட்சியில் தற்போது புது சீரியல் ஒன்று விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் பல நல்ல சீரியல்களை இயக்கி சமீபத்தில் மறைந்த தாய் செல்வம் பெயரில் தாய் கிரியேஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக புதிய நாடகம் ஒன்றை தயாரிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் அந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும், அதன் படப்பிடிப்புகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாக இருக்கிறது. ரியாலிட்டி ஷோக்களை மட்டுமே ஒளிபரப்பி வந்த விஜய் தொலைக்காட்சி தற்போது சீரியல்களை ஒளிபரப்புவுதில் முன்னிலை வகித்து வருகிறது.

மதியம் தொடங்கி இரவு 11 மணி வரை பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இதில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர் போன்ற தொடர்கள் அவ்வபோது டிஆர்பி ரேட்டிங்கிலும் இடம் பிடித்து வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்க இருப்பதால் இரண்டு சீரியல்கள் முடிவடைய இருப்பதாகவும் அது எந்த சீரியல்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சீரியல்களை முடிக்க போகிறார்களா? அல்லது மூன்று மாத காலம் நிறுத்தி வைத்துவிட்டு மீண்டும் தொடங்க போகிறார்களா என்பது தெரியவில்லை. இந்த நிலையில் புது சீரியல் ஒன்று தற்போது ஒளிபரப்பாக இருக்கும் தகவல் கிடைத்துள்ளது. ஒரு மொழியில் ஹிட்டான சீரியல்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கமாக இருக்கிறது.
பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர் போன்ற தொடர்கள் கூட அப்படிப்பட்ட தொடர்கள்தான். அந்த வகையில் தெலுங்கில் மா டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பு பெற்ற நுவ்வு நேனு பிரேமா என்கிற சீரியல் தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சுவாமிநாதன் தான் தெலுங்கில் ஹீரோவாக நடித்து வருகிறார். எனவே அவர்தான் இதிலும் நடிக்கப் போகிறாரா? அல்லது வேறு யாரேனும் நடிக்க போகிறார்களா என்பது தெரியவில்லை. தாய் க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த நாடகத்தில் ஹீரோயினாக வர்ஷினி நடிக்க இருப்பதாகவும், நேற்று ஷூட்டிங் தொடங்கி இருப்பதாகவும், விரைவில் இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.