இனி இவருக்கு பதில் இவர்.! மீண்டும் மாற்றப்பட்ட முல்லை.! புகைப்படத்துடன் இதோ.!

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் காவியா அறிவுமணி நாடகத்தை விட்டு விலகுவது உறுதியாகி இருக்கிறது. குடும்ப பங்கான தொடர்களில் முன்னிலை வகிப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 அண்ணன் தம்பிகள் எவ்வாறு ஒற்றுமையாக கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறார்கள் என்பது குறித்த கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் மூன்றாவது தம்பியாக வரும் கதிருக்கு ஜோடியான கதாபாத்திரம் தான் முல்லை. ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தா.ர் கதிருக்கும் முல்லைக்கும் இடையே இருக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே பலரும் இந்த நாடகத்தை விரும்பி பார்க்கத் தொடங்கினர். பின்னர் திடீரென ஒரு நாள் விஜே சித்ரா இறந்து விட்டதாக செய்தி வந்தது. அவர் அறை ஒன்றில் தூக்கு மாட்டி இறந்து விட்டதாக தகவல்கள் பரவின.

இனி இவருக்கு பதில் இவர்.! மீண்டும் மாற்றப்பட்ட முல்லை.! புகைப்படத்துடன் இதோ.! 1

விஜே சித்ராவின் இழப்பை பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருந்தது. பின்னர் அந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி முல்லையாக நடித்து வந்தார். இவர் பாரதி கண்ணம்மாவில் பாரதியின் தங்கையாக அறிவு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் அந்த நாடகத்தில் இருந்து விலகி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் காவியாவை முல்லையாக ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக காவியாவை ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் சமீப காலமாகவே காவியாவும் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியானது. தற்போது இது உண்மையாகவே நடந்துள்ளது. காவியா தற்போது தான் ஆர்க்கிடெக்ட் படிப்பை முடித்து டிகிரி வாங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் காவியாவும் சீரியலை விட்டு விலகுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அவர் பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் காவியா பிக்பாஸில் கலந்து கொள்ளவில்லை. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்துடன் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் காவியா. அதில் செப்டம்பர் 14ஆம் தேதி தனது கடைசி பாண்டியன் ஸ்டோர் ஷூட்டிங் என்று பதிவிட்டு, இந்த பயணத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் புதிய முல்லையாக யார் நடிக்க இருக்கிறார் என்ற பரபரப்பு கிளம்பிய நிலையில், சமீபத்தில் நிறைவடைந்த சிப்பிக்குள் முத்து சீரியலில் வாணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த லாவண்யா முல்லையாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த தகவலை லாவண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, என்னுடைய சிறப்பை நான் கொடுப்பேன் என்று பதிவிட்டுள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. விரைவில் லாவண்யா முல்லையாக வரும் ப்ரோமோவை பாண்டியன் ஸ்டோர்ஸ் டீம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube Video Code Embed Credits: Trend Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்