குக் வித் கோமாளியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் முந்தைய சீசன்களில் குக்குகள் சமைத்த மிகப் பிரபலமான உணவுகளை எடுத்து இந்த சீசனில் இந்த வாரத்திற்கான டாஸ்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் குக்குகள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்பது சமையலைத் தாண்டிய ஒரு நிகழ்ச்சியாகும். காமெடி, கலாட்டா, நட்பு, அழுகை, சிரிப்பு என அனைத்து கண்டென்டுகளும் கிடைக்கும் ஒரு இடமாக இந்த நிகழ்ச்சி இருந்து வருவதால் இந்த நிகழ்ச்சிக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. உலகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்க தவறுவதில்லை. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்களை முடித்து நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீசன் தொடங்கிய போது முதலில் பத்து குக்குகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஷெரின், வி.ஜே விஷால், மதுரை காளையன், ராஜ் ஐயப்பன், மைம் கோபி, ஆண்ட்ரியன், ஸ்ருஷ்டி, சிவாங்கி, விசித்ரா, கிஷோர் ராஜ்குமார் என்று மொத்தம் 10 பேருடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கஜேஷ் மற்றும் கிரண் ஆகியோர் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தனர். மொத்தம் ஏழு குக்குகள் எலிமினேட் செய்யப்பட்டு தற்போது ஐந்து குக்குகளுடன் டாப் 5 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்த நிகழ்ச்சி முடிந்து பிக்பாஸ் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. எப்பொழுதும் ஒரு சீசன் நடக்கும் பொழுது அதன் முந்தைய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் சீசன் 3-ல் இருந்து தற்போது குக்குகள் வருகை புரிந்து இருக்கின்றனர்.

அம்மு அபிராமி, முத்துக்குமார், தர்ஷன், ரோஷினி ஹரிப்ரியன், ஸ்ருதிஹா போன்ற ஐந்து பேர் வந்திருக்கின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் முந்தைய சீசன்களில் நன்றாக சமைக்கப்பட்ட ஒரு உணவை தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கு டாஸ்க்காக கொடுத்திருக்கின்றனர். இதை அப்படியே போட்டியாளர்கள் சமைக்க வேண்டும் என்று நடுவர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television