பாட்டை கிண்டல் செய்த மகாபா..! கோபத்தில் கத்திய கங்கை அமரன்.! வைரலாகும் ப்ரோமோ இதோ.!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இந்த வாரம் சிறப்பு விருந்தினராக வந்திருந்த கங்கை அமரன் பொறுமை இழந்து மாகாபா மற்றும் குரேஷிடம் கத்தி இருக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர் என்று சுமார் 9 சீசங்களை கடந்துவிட்டது இந்த நிகழ்ச்சி. தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நடந்து வருகிறது. இதனை வழக்கம் போல் பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகிய இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர். தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது சீசன் 9. டாப் 5 வில் பிரசன்னா, அபிஜித், பூஜா, பிரியா ஜெர்சன் மற்றும் அருணா ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர். முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு பாடகர்கள் மற்றும் பிரபல இசையமைப்பாளர்கள் ஆகியோர் நடுவர்களாக வந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாட்டை கிண்டல் செய்த மகாபா..! கோபத்தில் கத்திய கங்கை அமரன்.! வைரலாகும் ப்ரோமோ இதோ.! 1

விளம்பரம்

எஸ்பிபி யின் மகள் பல்லவி, வித்யாசாகர், சாம் சிஎஸ், கங்கை அமரன், புஷ்பவனம் குப்புசாமி, விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி என பலரும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கின்றனர். இதில் ஹிப்ஹாப் ஆதி அருணாவிற்கு தனது படங்களில் பாடும் வாய்ப்பை உடனடியாக வழங்கி சிறப்பித்திருக்கிறார். இதுபோல பல இசையமைப்பாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் பிரபல இசையமைப்பாளரும் பாடகரும் நடிகருமான கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார். இந்த வாரம் எபிசோடை மாகாபா மற்றும் குரேஷி ஆக இருவரும் தொகுத்து வழங்கி இருக்கின்றனர். அப்போது அருணாவை அழைத்தபோது மியூசிக் ஒன்று பின்னணியில் ஒலிபரப்பானது. இதை பார்த்த மாகாபா அனைவருக்கும் சினிமா பாடல் போட்டால், உனக்கு மட்டும் ஏன் சீரியலில் வரும் பாட்டு போடுகிறார்கள் என்று நக்கல் அடிக்கிறார். அப்போது குறுக்கிட்ட கங்கை அமரன், நானே ஏதோ கஷ்டப்பட்டு ஒரு பாட்டு போட்டால், அந்த மாதிரி பிஜிஎம் போடுகிறார்கள் எனக்கூற, குரேஷி இது உங்க பாட்டா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்.

தொடர்புடையவை  ஆதார் கார்டு கேட்ட பாண்டி...! உண்மையான வயது தெரிந்துவிடும் என மறைக்கும் தங்கமயில்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..!

பாட்டை கிண்டல் செய்த மகாபா..! கோபத்தில் கத்திய கங்கை அமரன்.! வைரலாகும் ப்ரோமோ இதோ.! 3
அப்போது மாகாபா, “வந்தனம் சைதாப்பேட்டை நந்தனம்” ன்னுக்கிட்டு என்று கிண்டல் அடிக்கிறார். உடனே கங்கை அமரன் அதை கேட்டு விட்டு ஏய் நான் போறேன்பா என்று கூறி கிளம்புகிறார். அப்போது மாகாபா போகாதீங்க, அப்புறம் நானும் வந்துடுவேன் உங்க கூட என்று சொல்ல மாகாபாவை பார்த்து ஏய் என்று உரத்த குரலில் கங்கை அமரன் கத்துகிறார். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment