விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் தான் புகழ். சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் சிறு கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை ரசிக்க வைத்து இருந்தார். சினிமா வாழ்க்கையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும் பங்கு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தனது காமெடி திறமையால் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் புகழ்.

சின்னத்திரையில் நடித்து வந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக கலக்கி வருகிறார். சிறு சிறு வேடத்தில் படங்களில் நடித்து வந்த புகழ் தற்போது, கதாநாயகனாகவும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜூ கீப்பர் படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் வில்லனாகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் வில்லனாக நடித்த கோலிசோடா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.
இவர் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். பல நட்சத்திரங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் புகழின் மகளுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.