தென்னிந்தியாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். அவர. தனது தந்தை இயக்கிய “நாளைய தீர்ப்பு” என்ற படத்தின் மூலம் 1992ல் தமிழ் திரையுலகில் அறிமுகமாகினர். ஆனால் அவரின் முதல் சில படங்கள் சரியாக ஓடவில்லை. பின்னர் அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. அன்று தொடங்கி இன்று வரை 65 படங்களில் நடித்து முடித்துள்ளார் விஜய். விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை பொறுத்தவரை அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், அனைவருக்கும் பரிட்சியமான இயக்குனர். தாய் ஷோபா கர்நாடக இசைக்கலைஞர் மற்றும் பிண்ணனி பாடகி. விஜயின் மனைவி சங்கீதா. இவர் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் சொர்ணலிங்கத்தின் மகள் ஆவார். 1999ம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா ஷாசா என்ற மகளும் உள்ளனர்.

தற்போது விஜய்யின் பழைய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜயின் படப்பிடிப்பு தளத்திற்கு சங்கீதா சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் சங்கீதாவின் தங்கை பிரதீபாவும் இருக்கிறார். பார்பதற்கு அப்படியே சங்கீதா போலவே இருவரும் இரட்டையர்கள் போல இருக்கிறார்கள். சங்கீதாவின் தந்தை லண்டனில் பிரபல தொழிலதிபராக இருப்பதால் அதை கவனித்துக் கொள்ள சங்கீதாவின் தங்கை பிரதீபா லண்டனிலேயே செட்டில் ஆகியுள்ளார். விஜய்க்கு திருமணமான புதிதில் தங்கை இந்தியா வந்திருந்த போது விஜய் நடிக்கும் படபிடிப்பை காட்டுவதற்காக தங்கையை அழைத்து சென்றுள்ளார் சங்கீதா. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வரைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் நடித்து இருந்தார் ஆனால் இந்த படம் சரியாக ஓடவில்லை. தற்போது தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. படம் பற்றி அப்டேட்களும், போட்டோக்களும் இணையத்தில் பரவி வரும் நிலையில் தற்போது அவரது மச்சினிச்சி இருக்கும் புகைப்படத்தை இணையவாசிகள் பரப்பி வருகின்றனர்.