Categories: அரசியல்

உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை..காலில் 3 விரல்கள் அகற்றம்..மனவேதனையில் தொண்டர்கள்

வெளியிட்டது

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் அவரின் வலது காலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் மூன்று விரல்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த செய்தியைக் கேட்ட தொண்டர்களும், ரசிகர்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். விஜயகாந்தை பொறுத்தவரை எதிரிகளை சம்பாத்தித்து வைக்காத ஒரு நல்ல மனிதர். கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை..காலில் 3 விரல்கள் அகற்றம்..மனவேதனையில் தொண்டர்கள் 1

பல ஏழை மக்களுக்கு நிறைய உதவிகள் செய்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். திரைத்துறையில் இருந்து, அரசியலுக்கு மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கில் வந்தவர்தான் விஜயகாந்த் அவர்கள். சாதிப்பதற்கு நிறமோ, அழகோ தேவையில்லை என்று சாதித்து காட்டியவர். ஒரு காலத்தில் தமிழ் சினிமா துறையில் கொடிகட்டி பறந்தவர்களில் ஒருவர்தான் அவர். ரஜினி, கமல் என இரு துருவங்களின் காலத்திலும் தனக்கென ஒரு முத்திரையை ஆணித்தரமாக பதித்து இருந்தார்.

பிறகு 2005ம் ஆண்டு தமிழகத்தின் இரு பெரும் துருவங்களான திமுக அதிமுகவிற்கு மாற்றாக தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார். தொடங்கிய அடுத்தே ஆண்டே வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். பிறகு எதிர்கட்சி தலைவரானார். பிறகு வந்த அனைத்து தேர்தல்களிலும் தேமுதிக தோல்வியை மட்டுமே சந்தித்தது. தொடர் தோல்விகள் விஜயகாந்தை முடக்கி போட்டன. அவரால் முன்பு போல் பேசவோ, நடக்கவோ முடியவில்லை. அவர் பெயரில் வெளியாகும் அறிக்கைகளில் கூட அவர் கையெழுத்து இருப்பதில்லை மாறாக ரப்பர் ஸ்டாம்பு வைத்து கையெழுத்து போட்டு இருப்பார்கள். இப்படியாக சில வருடங்களாக அமெரிக்காவில் மருத்துவம், ஓய்வு என அவரது வாழ்க்கையே முடங்கிவிட்டது எனக் கூறலாம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கி இருந்த விஜயகாந்த் தொடர்ந்து மருந்து மாத்திரைகளை எடுத்துவந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் வழக்கமான உடல் பரிசோதனை என்று மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அது வழக்கமான பரிசோதனை இல்லை. உடலில் சரியான ரத்த ஓட்டம் இல்லாததால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை இன்று அறுவை சிகிச்சை மூலம் 3 விரல்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த செய்தியைக் கேட்ட அவரது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். சிங்கம் போல் இருந்த மனிதனை இப்படி ஆக்கிவிட்டார்களே என்று தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Sathiyam News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்