“கயிறு இல்லாம….டூப் போடாம கோபுரத்தில் ஏறிய கேப்டன்”!!”சில்லறையை சிதற விடும் கேப்டனின் சேதுபதி IPS ஸ்டண்ட் சீன்”

வெளியிட்டது

நடிகர் விஜயகாந்த் என்றால் இப்போதைய தலைமுறையினருக்கு ஞாபகம் வருவது அவருடைய அரசியல் நக்கல் பேச்சுகளும், உடல்நலம் குன்றி போயிருக்கும் விஜயகாந்தை தான். ஆனால் அதுவே கொஞ்ச காலம் பின்னல் போய், 1980-90 இருந்த இளைஞர்களிடம் கேட்டால் தெரியும் கேப்டன் யார் என்று. ரஜினி, கமலிக்கு பெரிய பெரிய இயக்குனர்களின் படங்கள்  உதவின. ஆனால் கேப்டன் படங்களை இயக்கிய பிறகே பெரிய இயக்குனர்கள் ஆனவர்கள் பலர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"கயிறு இல்லாம....டூப் போடாம கோபுரத்தில் ஏறிய கேப்டன்"!!"சில்லறையை சிதற விடும் கேப்டனின் சேதுபதி IPS ஸ்டண்ட் சீன்" 1

குடும்ப படங்களும், பெரிதாக ஆக்ஷன் காட்சிகள் இடம்பெறாத 1980- 90 களில் ஆக்ஷன் படங்களில் மிக முக்கிய மாற்றத்தை கொடுத்தவர் தான் நம் கேப்டன்.  80களில் தானை மக்களிடம் ஒரு ஹீரோவாக நிலைநிறுத்த படங்கள் நடிக்கும் போதே “ஊமை விழிகள்” படத்தில் சிறு வயத்திலேயே அப்போது நடிகர்கள் தயங்கிய வயதான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார். அது மக்களுக்கு மிகவும் பிடித்து போகவே 1990களில் நிறைய ஆக்ஷன் படங்களே நடித்தார்.

குறிப்பாக சத்ரியன், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, ஹானஸ்ட் ராஜ், சேதுபதி I.P.S, திருமூர்த்தி, அலெக்சாண்டர் என நிறைய மிக சிறப்பான ஆக்ஷன் காட்சிகளை கொண்ட படங்களாகவே வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. AVM தயாரித்த சேதுபதி I.P.S படம் அந்த ஆண்டில் மட்டுமில்ல இப்பவும் AVM சார்பில் எடுக்கப்பட்ட மிக சிறப்பான வெற்றி படங்கள்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் Prime MInister ஒரு அரங்கில் மீட்டிங் வைக்க அங்கே பாம் இருப்பதாக செய்திகள் கிடைக்கிறது போலீசுக்கு. தேடி கடைசியில அங்கு இருக்கும் மணிக்கூண்டில் கிளாக் 12 மணி அடிச்ச வெடிக்கிற மாதிரி செட் பண்ணி இருப்பாங்க தீவிரவாதிகள். உடனே அந்த மணி கூண்டு கோபுரத்தில் ஏறும் விஜயகாந்த் செய்யும் ஆக்ஷன் காட்சிகள் பார்ப்போரை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்து விட்டன. அந்த படத்தின் மிக சிறப்பான ஆக்ஷன் காட்சி இது.

இப்பொது வெளியாகி 28ஆண்டுகள் தாண்டிய நிலையில் இது குறித்து AVM தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுவாரசிய செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது மணிக்கூண்டின் மேல் ஏறும் கேப்டன் அந்த காட்சியில எந்த வித டூப் போடாம..என கயிறு கூட காட்டாமல் துணிச்சலாக ஏறி நடித்து கொடுத்துள்ளார். கேப்டநோட டெடிகேஷன், சினிமா காதலும் தான் இந்த காட்சி இவ்வளவு தத்ரூபம வர உதவியுள்ளது என எழுதி அப்போ எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவும் வெளியிட்டுளளார் அவர். எப்படி இருந்த மனுஷன்யா கேப்டன் அப்படினு ரசிகர்கள் மீண்டும் இதே போல வந்து மக்கள் பணி கேப்டன் செய்ய வேண்டும் என வேண்டிவருகிறார்கள்.

 

Video Courtesy – AP international

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்