கேப்டன் விஜயகாந்த் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தனது தொண்டர்களை பார்க்க சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்தார். அவரை 5 பேர் அழைத்து வர திடீரென சக்கர நாற்காலியில் இருந்து எழுந்திரிக்க முயற்சி செய்த போது தடுமாறி சரிந்தார். அவரை தாங்கி பிடித்து அமர வைத்தனர். இதை பார்த்த தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என கத்தி தங்களது உணர்ச்சிகளை அடக்க முடியாமல் அழுதனர். இது அனைவரையும் நெகிழ வைத்தது. சினிமாவில் உச்ச நடிகராக இருந்த விஜயகாந்த், 2005 ஆம் ஆண்டு தேமுதிக என்கிற மாபெரும் கட்சியை தொடங்கினார். இதைப் பார்த்த தமிழகத்தில் இரு பெரும் அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவே கலக்கமடைந்தன. தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருந்து எம்ஜிஆர்க்கு பிறகு மாபெரும் கூட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் கேப்டன் என்று சொன்னால் அது மிகையில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய நடிப்புத் திறமையின் மூலமாக தமிழகம் எங்கும் கிராமம் தொடங்கி மூலை முடுக்கெல்லாம் ரசிகர் மன்றங்களை வைத்திருந்த ஒரு நடிகர் என்று சொன்னால் அது விஜயகாந்த் தான். இவருடைய பல படங்கள் திரையரங்கில் 100 நாட்களுக்கும் அதிகமாக ஓடி சாதனை படைத்திருந்தது. நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்து வந்த கடனை சில நாட்களிலேயே, பல கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைத்தார். மேலும் நலிவடைந்த கலைஞர்களுக்காக ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தி இருந்தார் விஜயகாந்த். பின்னர் அரசியலில் நுழைந்த அவர் எடுத்த எடுப்பிலேயே பத்து சதவீத வாக்குகளை பிடித்து திமுக அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால் அவரால் தொடர்ந்து அரசியலில் நடைபெற முடியவில்லை, தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது அவருடைய கட்சி தேமுதிக.

இந்த நிலையில் தொடர் தோல்விகளால் கேப்டன் விஜயகாந்த் இருக்கும் உடல்நிலை நலிவடைந்துள்ளது. அவர் பழையபடி செயல்பட முடியாமல் வீட்டிலேயே முடங்கி விட்டார். அவருடைய தொண்டர்களை மட்டும் அவ்வப்போது சந்தித்து வரும் கேப்டன், வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார் அவருக்கு தைராய்டு பிரச்சனையும் பேசுவதில் பிரச்சனை இருப்பதால் அவர் விரைவில் சிகிச்சை முடிந்து பழைய விஜயகாந்த் ஆக வருவார் என்று அவரது மனைவி தொடர்ந்து கூறி வருகிறார். இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தனது தொண்டர்களை பார்க்க சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்தார். அவரை 5 பேர் அழைத்து வர திடீரென சக்கர நாற்காலியில் இருந்து எழுந்திரிக்க முயற்சி செய்த போது தடுமாறி சரிந்தார். அவரை தாங்கி பிடித்து அமர வைத்தனர். இதை பார்த்த தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என கத்தி தங்களது உணர்ச்சிகளை அடக்க முடியாமல் அழுதனர். அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below Video.!
Youtube Video Code Embed Credits: Thanthi TV