நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. அந்த புகைப்படங்களை விஜயகுமாரின் பேத்தி தியாவே சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். விரைவில் அவருக்கு திருமணம் நடக்க இருக்கும் செய்தியையும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் திரை உலகில் கலைக் குடும்பமாக விளங்கி வருகின்றது விஜயகுமாரின் குடும்பம். இவரது மனைவி மஞ்சுளா, மூத்த மகன் அருண், மகள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் என அனைவரும் திரைத்துறையிலேயே இருந்து வருகின்றனர்.
வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி சில படங்களில் மட்டுமே நடித்தனர். திருமணமாகி குடும்பம் குழந்தைகள் என்று ஆன பிறகு மூவரும் திரைத் துறையை விட்டு விலகி விட்டனர்.
தற்போது விஜயகுமாரும் அவரது மகன் அருண் விஜய் மட்டுமே படங்களில் நடித்து வருகின்றனர்.
நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். மூத்த மனைவியை முத்துக்கண்ணுவிற்கு அருண் விஜய், அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார் என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கு வனிதா, ஸ்ரீதேவி, ப்ரீத்தா என்று மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
வனிதா மட்டும் இல்லாமல் மீதமுள்ள குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜயகுமாரின் மூத்த மனைவியின் மகளாக இருக்கும் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.
அந்தப் புகைப்படங்களை அவரே தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் புதுமண தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
மீண்டும் குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக இருப்பதை பார்க்கவே மிகவும் சந்தோஷமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.!