Categories: சினிமா

விஜய் ஆண்டனிக்கு வில்லனாக மாறிய கெளதம் மேனன்.! ‘ஹிட்லர்’ படத்தின் அதிரடியான டீசர் இதோ.!

வெளியிட்டது

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத தொடங்கி, தற்போது நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என பன்முக திறமையாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘தமிழரசன்’, ‘பிச்சைக்காரன் 2’ ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. எனவே மீண்டும் தன்னுடைய புதிய படங்களில் கவனத்துடன் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் விஜய் ஆண்டனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனிக்கு வில்லனாக மாறிய கெளதம் மேனன்.! 'ஹிட்லர்' படத்தின் அதிரடியான டீசர் இதோ.! 1
தற்போது விஜய் ஆண்டனி சஞ்சய் குமார் தயாரிப்பில், தனா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் ‘ஹிட்லர்’. திரில்லர் கதையம்சத்துடன் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், விஜய் ஆண்டனி நடித்த முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்திருக்கிறார். மேலும் முதன்முறையாக நடிகரும் இயக்குனருமான கௌதம் வாசுதேவ் மேனன் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் ஆகிய இருவர் இசையமைக்க, நவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா படமாக இந்த படம் உருவாகியுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பு மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில், தற்போது டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. நீங்களும் அந்த டீசர் வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Star Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்