“Who killed laila…ஷெர்லாக் ஹோல்ம்ஸாக மாறிய விஜய் ஆண்டணியின் கொலை டீஸர்”

வெளியிட்டது

இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுக இப்பொது நடிகராக வெற்றிகரமாக வளம் வருபவர் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. “நான்” படம் மூலம் நடிகரான இவருக்கு “பிச்சைக்காரன்” படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. தமிழ் மட்டுமின்றி மொழி மாற்றம் செய்யபட்ட இந்த படம் தெலுங்கிலும் நல்ல வெற்றியை பதிவு செய்தது. கடைசியாக கோடியில் ஒருவன் படத்தில் நடித்துஇருந்த இவர் இப்பொது “கொலை, அக்னிச்சிறகுகள், வள்ளி மயில்” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

"Who killed laila...ஷெர்லாக் ஹோல்ம்ஸாக மாறிய விஜய் ஆண்டணியின் கொலை டீஸர்" 1

இதில் தற்போது கொலை படத்தின் போஸ்டர் ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. விடியும் முன் என்ற திரில்லர் படத்தை இயக்கிய “பாலாஜிகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன், மிஸ்டரி, திரில்லர் கக்கதைகளத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தில் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர். நாயகியாக ரித்திகா சிங்க் நடித்துள்ளார்.

ஒரு கொலை சம்பவத்தை சுற்றி நடக்கும் கதைக்களத்தில் கொலையை கண்டுபிடிக்க விஜய் ஆண்டனி முயல்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் விஜய் அந்தோணிக்கு அடுத்து முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார்.

அண்மையில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் அறிமுக போஸ்டர்கள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் ஆண்டணி, ராதிகா, ரித்திகா சிங்க் என பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அந்த விடியோவை நீங்களும் காண…

Video Courtesy – Thinkmusic India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்