Categories: சினிமா

வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி!!

வெளியிட்டது
வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி!! 1

நடிகர் விஜய்சேதுபதி எப்போதும் தனக்கென்று ஒரு இடத்தை திரையுலகில் நிலைநாட்டி வருபவர். அவர் எந்த கதாபாத்திரத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக முடித்து கொடுப்பவர் அது வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அல்லது ஹீரோவாக இருந்தாலும் சரி. மற்ற பெரிய நடிகர்கள் படங்களில் கவுரவ தோற்றங்களிலும் நடிக்கிறார்.

முந்தைய படங்களான சீதக்காதியில் வயதானவராகவும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும், ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாகவும், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டியில் போர் வீரனாகவும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

இப்போது விஜய்யுடன் நடிக்கிறார். நண்பராக வருகிறாரா? அல்லது விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா? என்பதை படக்குழுவினரால் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடைசி விவசாயி என்ற இன்னொரு சமூக பிரச்சனையை எடுத்துரைக்கும் கதையில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். காக்கா முட்டை படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற மணிகண்டன் இயக்கத்தில் இந்த படம் தயாராகி உள்ளது. இவர் ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை ஆகிய படங்களை இயக்கியவர். கடைசி விவசாயி படத்தின் டிரெய்லரை விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

பில்கேட்சிடம் பேசி விட்டாயா? என்று ஒருவர் கேட்க நான் பேசி விட்டேன். அவர்தான் என்னுடன் பேசவில்லை என்ற நக்கலான வசனத்தோடு டிரெய்லரில் அறிமுகமாகும் விஜய்சேதுபதியின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை ஈர்க்க வைத்துள்ளது. குரங்குக்கு வாழைப்பழம் கொடுத்து அவர் பேசும் வசனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதாகவே கூறப்பட்டது. ஆனால் டிரெய்லரில் முதியவர் ஒருவரையே கதாநாயகன் போன்று காட்டப்பட்டுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்