ஷங்கருடன் மீண்டும் இணைகிறார் விஜய்!!

ஷங்கருடன் மீண்டும் இணைகிறார் விஜய்!! 1

2012-ல் ஷங்கர் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான நண்பன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் அது இந்தியில் அமீர்கான் நடித்து வசூல் அள்ளிய 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கி இருந்தனர். தற்போது இவர்கள் இருவரும் புதிய படத்தில் இணைய வேண்டுமென்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இதுவரை அது நடக்கவில்லை. இந்த நிலையில் ஷங்கரிடம் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது, நானும் விஜய்யும் தயார். நாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து பணியாற்றி படத்தை இயக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார். ஷங்கரின் பதில் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

இந்நிலையில் விஜய் நடிப்பதற்கு ஏற்றார் போல கதையை ஷங்கர் தயார் செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கதையை விஜய்யிடம் சொல்லி ஒப்புதல் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஷங்கரும் கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். இருவரும் பட வேலைகளை முடித்து விட்டு புதிய படத்தில் இணைவது குறித்து முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment