வைணவ முறைப்படியாக இருந்தாலும் இப்படி தான் இறுதி சடங்குகள் செய்தோம் – ஐயர் பேட்டி

வெளியிட்டது

உலகம் எங்கிலும் வசிக்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டு சென்றிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். திரைத்துறை மட்டுமல்லாமல் பல மக்களுக்கு அன்னமிட்ட அந்த கைகள் இன்று ஓய்வு பெற்றிருப்பது பலரையும் கலங்க வைத்திருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் அரசியல் உலகிலும் எதிரியே சம்பாதிக்காத ஒருவர்தான் கேப்டன் விஜயகாந்த். அவர் சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக எதிர்பாராத விதமாக காலமாகி இருந்தார். மீண்டு வந்து விடுவார் என்று பலரும் நினைத்திருந்த நிலையில் அவரது இறப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வைணவ முறைப்படியாக இருந்தாலும் இப்படி தான் இறுதி சடங்குகள் செய்தோம் - ஐயர் பேட்டி 1
தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்கள், தமிழகம் சார்ந்த நல விஷயங்கள், உரிமைகள் என்று தொடர்ந்து மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு தமிழக மக்கள் பலரும் இன்று ஒன்று கூடி புகழஞ்சலி செலுத்தியிருந்தனர். சுமார் 15 லட்சம் மக்கள் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கேப்டன் இறந்த போது கூட இறுதிச் சடங்கில் அவர்கள் குடும்பத்தினர் செய்துள்ள விஷயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேப்டனுக்கு இறுதிச்சடங்கு செய்த ஐயர் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கிறார். அவர் கூறும் பொழுது, கேப்டனின் குடும்பம் வைணவ சமுதாயத்தைச் சேர்ந்த நாயுடு குடும்பமாக இருந்த போதிலும் அவருக்கு இறுதிச்சடங்குகளில் பட்டினத்தார் பாடல்கள், தேவாரம், திருவாசகம், திருப்பாவை பாடல்களை பாடி அடக்கம் செய்ய தங்களை கேட்டுக் கொண்டனர்.


அதுவும் குறிப்பாக தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளை பயன்படுத்தாமல் தமிழில் பாடி அவருக்கு அடக்கம் செய்ய அவர்கள் கேட்டுக் கொண்டனர். அதன்படியே தாங்களும் கேப்டனுக்கு இறுதிச் சடங்குகள் செய்தோம் என்று நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கின்றனர். தனது வாழ்நாள் முழுவதும் தமிழ், தமிழ் மக்கள் என்று தமிழுக்காக ஓடிக்கொண்டே இருந்த கேப்டன் தனது இறப்பில் கூட தமிழில் மந்திரங்கள் சொல்லி விடை பெற்று இருப்பது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நீங்களும் அவர்கள் அளித்த அந்த பேட்டியைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Thanthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்