புதிய நிகழ்ச்சியை தொடங்கிய விஜய் டிவி.! என்ட்ரி கொடுத்த ராதிகா மற்றும் KS ரவிக்குமார்.!

வெளியிட்டது

பல நல்ல நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பாக்கி வரும் விஜய் தொலைக்காட்சி தற்போது புதிய நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப இருக்கிறது. ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோக்களை மட்டுமே ஒளிபரப்பி வந்த விஜய் தொலைக்காட்சி, தற்போது பல நாடகங்களை ஒளிபரப்பி வருகிறது. இதில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே, தமிழும் சரஸ்வதியும், பாரதி கண்ணம்மா, சிறகடிக்க ஆசை, ஆஹா கல்யாணம் என்று பல நாடகங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இதில் பல நாடகங்கள் முடிவுக்கு வர இருக்கின்றது. சில புதிய நாடகங்களும் ஒளிபரப்பாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய நிகழ்ச்சியை தொடங்கிய விஜய் டிவி.! என்ட்ரி கொடுத்த ராதிகா மற்றும் KS ரவிக்குமார்.! 1
அதன்படி முத்தழகு, பாரதி கண்ணம்மா 2, காற்றுக்கு என்ன வேலி போன்ற சீரியல்கள் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், தற்போது புதிய சீரியல்களை தொடங்க விஜய் டிவி ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் ராதிகா சரத்குமார் தனது ரேடான் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் கிழக்கு வாசல் சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோ வெளியாகி சில நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் எந்தவித அப்டேட்டும் முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா 2 சீரியலை விரைவில் முடித்துவிட்டு அதற்கு பதிலாக கிழக்கு வாசல் சீரியல் ஒளிபரப்பப்படலாம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கில் மிகக் குறைவான இடத்தை பிடித்திருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது தான் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஆனால் அந்த சீரியலை முடிக்க விஜய் டிவி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் விஜய் டிவியில் பல புதிய சீரியல்கள் தயாரிக்கப்படவும், ஒளிபரப்பாகவும் இருப்பதால் புது ஹீரோயின்களும் தேவைப்படுகின்றனர்.


ஹீரோயின்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் அவர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஒரு தேடல் நிகழ்ச்சியாக புதிய நிகழ்ச்சி ஒன்றை விஜய் டிவி அறிமுகப்படுத்தப் படுத்தியிருக்கிறது. கதாநாயகி என்று பெயரிடப்படப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சிக்கு கேஎஸ் ரவிக்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் நடுவர்களாக வந்திருக்கின்றனர்.

தற்போது இந்த அறிவிப்பை விஜய் டிவி ப்ரோமோவாக வெளியிட்டு இருக்கிறது. வருகின்ற ஜூலை 29ஆம் தேதி முதல் 12 மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்களும் அதை ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்