அடுத்த வாரத்துடன் “சிப்பிக்குள் முத்து” சீரியலை முடிக்க உள்ள விஜய் டிவி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

வெளியிட்டது

பிக்பாஸ் தொடங்க இருப்பதால் இரண்டு முக்கிய சீரியல்களை விஜய் டிவி முடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், விரைவில் சிப்பிக்குள் சீரியலை முடிக்க இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தொடரை அடுத்த வாரத்துடன் முடிக்க இருப்பதாக சேனல் குழு முடிவுவெடுத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றுதான் பிக்பாஸ். 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, விஜய் டிவியில் இரவு ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும். எப்பொழுது பிக்பாஸ் ஆரம்பித்தாலும், அதற்கு ஏற்றவாறு இரண்டு நாடகங்களை விஜய் டிவி முடிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது சிப்பிக்குள் முத்து சீரியலை முடிக்க இருப்பதாகவும், இதன் கடைசி எபிசோடு அக்டோபர் ஏழாம் தேதி எனவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அடுத்த வாரத்துடன் "சிப்பிக்குள் முத்து" சீரியலை முடிக்க உள்ள விஜய் டிவி.! அதிர்ச்சியில் ரசிகர்கள் 1

சிப்பிக்குள் முத்து சீரியல் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டது. இதில் ஹீரோவாக வரும் ஆகாஷ் விபத்தினால் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரின் தம்பி ஒரு பெண்ணை காதலித்து வருவார். வேறு வழியில்லாமல் அந்தப் பெண்ணின் அக்காவையே அண்ணன் ஆகாஷுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அண்ணனுக்கு அக்காவையும், தம்பிக்கு தங்கையையும் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். திருமணமான பின்பு அவரின் மனநலத்தை மீண்டும் எப்படியாவது பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆகாஷின் மனைவி படாத பாடுபடுவார். ஒரு கட்டத்தில் ஆகாஷுக்கு பழைய நினைவுகள் திரும்பிவிடும். ஆனால் விபத்துக்கு பின் நடந்த எதுவுமே அவருக்கு ஞாபகம் இருக்காது. விபத்துக்கு பின்தான் அவருக்கு திருமணம் நடந்தது என்பதால் அவர் தனது மனைவியும், குழந்தையுமே மறந்து விடுவார்.

தற்போது ஆகாஷ் தன்னுடைய பழைய காதலியை அழைத்து வந்து குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். இந்த தொடரில் நடிக்கும் பலரும் தங்களது முழு பங்களிப்பை கொடுத்த போதிலும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் பலத்த அடிவாங்கியுள்ளதாக தெரிகிறது. எனவே பிக்பாஸிற்காகவும் இந்த தொடரை விரைவில் முடிக்க இருப்பதாக தெரிகிறது. மீண்டும் ஆகாஷ் தனது மனைவி வாணியுடன் சேர்வது போல் கதை காண்பிக்கப்பட்டு வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதியுடன் இந்த சீரியல் நிறைவடைகிறது. மேலும் கண்ணே கலைமானே என்ற புதிய சீரியலின் ப்ரோமோ வெளியாகியிருப்பதால், அந்த சீரியலுக்காக இதை முடிக்கிறார்களா? இல்லை பிக்பாஸிற்காக இதை முடிக்கிறார்களா என்பது இன்னும் சிறிது நாட்களில் தெரிந்துவிடும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்