“அவரு துரோகம் பண்ணாரு’னா…நீங்க பண்ணதுக்கு என்ன சொல்றது”!! பாக்கியா Vs ராதிகா”!!

வெளியிட்டது

விஜய் டிவியின் தற்போதைய பரபரப்பான தொடர் “பாக்கியலட்சுமி”. பல்வேறு கோணங்களில் சென்ற இந்த தொடர் திடீரென கோபி ராதிகா என்று ஒரு தனி ட்ராக் உருவாக்கி அதுமுதல் மிக பெரிய வெற்றியையும், மக்களிடம் ஆதரவையும் பெற்று வருகிறது. மிகவும் பரபரப்பாக சென்றுகொள்ளும் இந்த தொடர் இப்பொது மற்றொரு பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.  திருமணமான கோபி, மனைவி பாக்கியவிற்கு தெரியாமல் தன்னுடைய பழைய காதலியான ராதிகாவுடன் திருமணத்திற்கு ஆயுதம் ஆகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"அவரு துரோகம் பண்ணாரு'னா...நீங்க பண்ணதுக்கு என்ன சொல்றது"!! பாக்கியா Vs ராதிகா"!! 1

கோபியின் உறவினர்கள் மூலம் உண்மையை அறியும் ராதிகா, பாக்கியாவிற்கு துரோகம் செய்யா முடியாமல் , ஊரை விட்டு போகும் முடிவை எடுக்கிறாள். இதனை பாக்கியவிடமும் கூற, சங்கடத்திற்கு உள்ளாகிறாள் பாக்கிய. அதே நேரம் ஊரை விட்டு போகும் ராதிகாவை சமாதான படுத்த நினைக்கும் கோபி அவள் வீட்டிற்கு சென்று கெஞ்ச, அவள் சம்மதிக்க மறுக்கிறாள். அப்போது அங்குவரும் ராதிகாவின் பழைய கணவர் ராஜேஷை கோபி தாக்கி விட்டு செல்கிறான்.

பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கும் ராதிகாவின் கணவர் ராஜேஷ், இந்த விஷயத்தை கோபியின் குடும்பத்தாரிடம் கூறிவிட வேண்டும் என்ற முடிவில் அவர்கள் வீட்டிற்கு சென்று “உங்க புள்ளைக்கு தான் குடும்பம் இருக்கே…எதுக்கு  என் பொண்டாட்டி வீட்டில் இருக்கான்,” என கூற இதனை கேட்டு அதிர்ச்சியாகும் கோபியின் தாயார் அவன் கூறுவதை நம்ப மறுக்கிறாள். கோபியின் மகன் எழில் ராஜேஷை வெளியே இழுத்துட்டு வந்து “அப்பாக்கு முன்னாடி பழக்கம் இருந்துச்சு..ஆனா இப்போ இல்ல, என கூற, ராஜேஷ் “இந்த இத பாரு” என கோபி ராதிகா காலில் விழுந்து அழுகும் விடியோவை காண்பிக்கிறான். அதிர்ச்சியில் உறைகிறான் எழில்.

இந்த சம்பவம் குறித்து எழிலிடம் கதறி அழுது கொண்டே முறையிட்டு கொண்டிருக்கிறாள். கொஞ்சம் கூட பொறுக்க முடையதா ராமமூர்த்தி கொந்தளித்து போய், “ஈஸ்வரி கொஞ்ச நேரம் நிறுத்து…உன் கவலை படுற அளவிற்கு உன் புள்ள யோகியும் இல்ல, அவன் இனொரு பொம்பள கூட தொடர்புல தான் இருக்கான்” என கூறிவிடுகிறார். இதனின் கேட்கும் ஈஸ்வரி நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைகிறாள்.

மருத்துவமனையில் இருந்து திரும்பும் கோபியிடம் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை வைக்கிறாள் பாக்கியா. ஈஸ்வரியும் உண்மை தெரிந்து கோபியை அடித்து விட்டு நிற்க, அங்கு கோபி வாங்க நினைத்த விவாகரத்து பாத்திரம் வருகிறது. அதனை வங்கியும் பாக்கியா, “உங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை நீங்க வாழுங்க…ஆனா அத பாத்துட்டு நான் இங்க இருக்க மாட்டேன்” என கூறி விவாகரத்து பத்திரத்துடன் வீட்டை விட்டு கிளம்புகிறாள். குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைய கோபி அங்கேயே நிற்கிறான்.

வீட்டை விட்டு வெளியேறும் பாக்கிய தான் சொந்தமாக நடத்திவரும் கேட்டரிங் சென்டரில் தஞ்சம் அடைகிறாள். உடன் அவளுடைய முத்த மகனும் சென்று விடுகிறான். குடும்பம் அமைதியை இழந்து அனைவரும் அங்கும் இங்குமாக இருக்கிறார்கள்.

உண்மை தெரிந்த பின்பும் பொறுக்க முடியாமல் இருக்கும் பாக்கிய, நேராக ராதிகாவின் வீட்டிற்கு சென்று அவளிடம் பேசிவிடுகிறாள். “அவரு எனக்கு பண்ணது துரோகம்’னா நீங்க பண்ணத நான் என்னனு சொல்ல, உங்கள நம்புனத்துக்கு எனக்கு நல்ல மரியாதையை செஞ்சிட்டேங்கனு” பாக்கிய கொஞ்சம் கோபத்துடன் பேச, தவிப்பில் இருக்கும்   ராதிகா, “அயோ டீச்சர் இதெல்லாம் எனக்கு தெரியாமலே நடந்திருச்சு” என கெஞ்சி அழுகிறாள்”. அந்த ப்ரோமோவை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Video Courtesy – Vijay television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்