திரை துறை மீது கொண்ட காதலால் பல வருடனால் போராடி வாய்ப்பு பெற்று வெற்றி பெற்றவர்கள் அதிகம். அண்ட் ஆசையில் கடைசி வரை வாய்ப்பு கிடைக்காமல் தோற்றுபோனவர்களும் அதிகம். ஆனால் அந்த முயற்சியில் வென்று இந்திய அளவில் பேசப்படும் மிக சிறந்த நடிகராக இருப்பவர் சீயான் விக்ரம். பின்னணியில் பிரபல நடிகர்கள் அஜித் மற்றும் பிரபுதேவாவிற்கு குரல் கொடுத்த இவர் தன்னுடைய வெற்றிக்காக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு. மலையாள மொழியை படங்களிலும் நடித்துள்ளார்.

முயன்று கொண்டே இருந்த இவருக்கு வெற்றியை அளித்த படம் “சேது’. இயக்குனர் பாலா அறிமுகமான இந்த படம் வெளியான முதல் வாரத்தில் சென்னையில் ஒரே ஒரு திரையரங்கில் மட்டுமே வெளியானது, ஆனால் அப்போது பிரபலமான ஆனந்த விகடனின் விமர்சனம் மூலம் படம் பெரிய வெற்றியை பதிவு செய்ய உதவியது. இன்றளவும் பிரபலம். கிடைத்த வெற்றியை கெட்டியாக பிடித்து கொண்டு சியான் அடுத்தடுத்து படங்கள் மூலம் வெற்றியை கொடுக்க துவங்கினார். சேது படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட பெயரே சீயான்/ அந்த அப்படத்தின் வெற்றி இவரை இன்றளவும் சியானாகவே மக்களிடம் காட்டுகிறது.
தில், தூள், கிங், சாமீ, அருள், பிதாமகன், அந்நியன், கந்தசாமி, ஐ, இராவணன் போன்ற வெற்றிப்படங்கள் கொடுத்துள்ளார். அண்மையில் வெளியான இவருடைய “மகான்” படம் திரையரங்கில் வந்துஇருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர். அந்த படமும் அந்த அளவிற்கு சிறப்பான ஒரு படமாக அமைந்தது. இப்பொது இவர் கௌதம் வாசுதேவ் மேனனின் “துருவ நட்சத்திரம்”, அஜய் ஞானமுத்துவின் “கோப்ரா”, மணிரத்னனத்தின் “பொன்னியின் செல்வன்” மற்றும் பெயரிடிப்படாத பா.ரஞ்சித் படம் என அனைத்துமே சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார்.
பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் கடந்த 8ஆம் தேதி வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றது. அன்று திடீரென உடல்நல குறைவால் நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி என செய்திகள் பரவின. நிறைய தவறுதலான விஷயங்கள் கூறப்பட்ட நிலையில் இரண்டே நாட்களில் வீடு திரும்பினார். நேற்று அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில், விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள “கோப்ரா” படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய நடிகர் சீயான் விக்ரம் “20 வயது இருக்கும்போது எனக்கு விபத்து ஏற்பட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்போது எனது காலை இழக்க வேண்டிய தருணம் வந்தது. ஆனால் அதில் இருந்தும் நான் மீண்டு வந்தேன். எனவே அதை பார்க்கும்போது இதெல்லாம் ஒன்றுமே கிடையாது.எவ்வளவோ பாத்துவிட்டோம். இதெல்லாம் ஒண்ணுமில்லை என்பதால் வதந்திகள் பற்றி கவலைப்படவில்லை. எனது குடும்பம், எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவாக இருக்கும் வரை எனக்கு எதுவும் ஆகாது. சிறிய அசௌகரியத்தால் மருத்துவமனை செல்ல நேர்ந்தது. ஆனால் அதனை இந்த அளவுக்கு கொண்டுசென்றுவிட்டார்கள். இதனால் என்னை நேசிக்கும் சிலர் சங்கடங்களை சந்தித்தனர். அவர்கள் அனைவருக்காகவும், நான் நன்றாக இருக்கிறேன் என சொல்லவே இந்த மேடைக்கு வந்துள்ளேன்.
“நான் எப்பவும் சினிமாவுக்காகவே வாழ்வேன். மற்றதை காட்டிலும் சினிமாவே எனது உயிர். பல ஆண்டுகளுக்கு முன் சோழா டீ விளம்பரத்தில் நடித்தேன். அன்று விளம்பர படத்துக்கு திலீப்குமார் என்பவர் இசையமைப்பாளராக இருந்தார். அன்று அந்த விளம்பரத்தில் சோழ ராஜனாக நடித்தேன். ஆனால், இன்று மிகப்பெரிய காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் எனது கனவு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஆதித்த கரிகால சோழனாக நடித்துவிட்டேன். இரண்டு ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நமக்கு என்று ஒரு கனவு லட்சியம் இருந்தால், அதற்கேற்ற உழைப்பை கொடுத்தால் நாம் நினைப்பதை விட பெரிய இடத்தை அடைய முடியும். ரசிகர் அன்பும் ஆதரவும் நிறைய இருக்கிறது. ரசிகர்களை பற்றி நினைக்கும் போது வார்த்தைகள் வருவதில்லை” என நெகிழ்ச்சியாக பேசினார்.
Video Courtesy – Lyca Producions