மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. கமல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்தில் நடித்து வெளியாகியுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. ஒரு ரசிகராக இருந்து Fan Boyயாக லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி இருந்தார். அதிகாலை 4 மணி முதல் காட்சி வெளியானது. படத்தை காண கமல் ரசிகர்கள் காலை முதலே தியேட்டர்களில் குவிந்து வருகின்றனர். முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பல தியேட்டர்களிலும் டிக்கெட் தீர்ந்துவிட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த படத்தில் கமலுடன் இணைந்து சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்றவர்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தியேட்டரையும் தெறிக்க விட்டுள்ளது அனிருத்தின் இசை. காலை ஷோவே அனிருத், லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் படத்தை பார்க்க வந்தனர். படம் முடித்து விட்டு வெளியே வந்த அனிருத், லோகேஷை சூழ்ந்து கொண்டு ரசிகர்கள் படாதபாடு படுத்தி எடுத்துவிட்டனர்.
இந்த படம் குறித்து ரசிகர்கள் பேசுகையில் படம் மிக நன்றாக இருப்பதாகவும், முதல் பாதியில் கமல் திரையில் தோன்றும் நிமிடங்கள் மிகக்குறைவாக இருந்ததாகவும் கூறினர். சூர்யா ஒரு மூன்று நிமிடங்கள் மட்டுமே தோன்றியதாகவும் ஆனாலும் பட்டைய கிளப்பியுள்ளதாகவும் கூறினர். ஒருவர் கூறுகையில் படத்தில் கமலே காணவில்லை என்று கூறினார். கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது விக்ரம் திரைப்படம். மேலும் ஒருவர் கூறுகையில் படம் சூப்பராக இருக்கு ஆனா கமல் சுத்தமாக படத்தில் இல்லை என்று கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..
Video Courtesy: IndiaGlitz