திடீரென காலில் விழுந்த “கூல்” சுரேஷ்!!பதறிய பேட்டியளர்கள் பேட்டியாளர்களிடம் செய்த “கூல்” சுரேஷ் செய்த செயல்!!

ஒவ்வொரு படம் வெளி வரும் போதும் இப்போது பல ரிவியூ செய்பவர்கள் பல்வேறு விதமாக அவற்றை ரிவியூ செய்வார்கள். ப்ளூ சட்டை மாறன், பிரசாந்த் போன்றோருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இதன் மூலம் உள்ளது. எப்போதும் நெகட்டிவாக பேசும் மாறனுக்கு கூட காத்திருப்போர் அதிகம். அந்த வகையில் இப்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரிவியூராக இருக்கிறார் நடிகர் “கூல்” சுரேஷ்.

திடீரென காலில் விழுந்த "கூல்" சுரேஷ்!!பதறிய பேட்டியளர்கள் பேட்டியாளர்களிடம் செய்த "கூல்" சுரேஷ் செய்த செயல்!! 1

விளம்பரம்

2001ஆம் ஆண்டு வெளியான பிரசாந்தின் “சாக்லேட்” படத்தில் ரௌடியாக அறிமுகமாகி பின்னர் ஆயுத எழுத்து, காக்க காக்க, அலை, மச்சி, தேவதையை கண்டேன், குசேலன், படிக்காதவன், சிங்கம்புலி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் என பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துளளார். ஆனால் இவருக்கு அங்கீகாரம் கொடுக்கும் வங்கியில் இப்பொது வரை சிறப்பான பாத்திரங்கள் அமையவில்லை என்பது சோகத்திற்குரிய விஷயமே.

திடீரென காலில் விழுந்த "கூல்" சுரேஷ்!!பதறிய பேட்டியளர்கள் பேட்டியாளர்களிடம் செய்த "கூல்" சுரேஷ் செய்த செயல்!! 3

விளம்பரம்

இருப்பினும் தன்னுடைய நடிப்பு ஆர்வத்தை கைவிடாமலும் தொடர்ந்து வருகிறார். இவர் நடிகர் சிம்புவின் நல்ல நண்பர். இயக்குனர், நடிகர் டி.ஆர்.ராஜேந்திரனுக்கு ரொம்ப நெருக்கம். சிம்பு பெரிய பெரிய பிரச்சைனைகளில் சிக்கி, ரெட் கார்டு பெற்று அனைத்தையும் சரி செய்து மீண்டும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் “மாநாடு” என்ற படத்தின் மூலம் நீண்ட காலமாக தவறிக்கொண்டிருந்த மெகா ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றார்.

தொடர்புடையவை  வெந்து தணிந்ததா காடு? முழு திரைவிமர்சனம் இதோ.! ரேட்டிங் (?/5)

“மாநாடு” திரைப்படம் சிம்புவிற்கு எவ்வளவு மகிழ்ச்சியை, உற்சாகத்தை கொடுத்ததோ அதோ போல அவருடைய ரசிகர்களும் படத்தை கொண்டாடி தீர்த்தனர். நண்பரான “கூல்” சுரேஷ் தன்னுடைய மகிழ்ச்சியை படத்தை பார்த்து விட்டு சந்தோசமாக ரிவியூ செய்தார். அப்போது அவர், “வெந்து தணிந்தது காடு, மவனே சிம்புவிற்கு வணக்கத்தை போடு” என சந்தோஷ மிகுதியில் கூறிய வார்த்தை அவருக்கு மிக பெரிய பப்பிளிசிட்டியை கொடுத்தது.

விளம்பரம்

திடீரென காலில் விழுந்த "கூல்" சுரேஷ்!!பதறிய பேட்டியளர்கள் பேட்டியாளர்களிடம் செய்த "கூல்" சுரேஷ் செய்த செயல்!! 5

தொடர்நது பல படத்திற்கும் இவர் இப்போது இதே பாணியில் ரிவியூ செய்து வருகிறார். இன்று வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள கமலின் “விக்ரம்” படத்தை ரிவியூ செய்த அவர், அப்போது அங்கிருந்த பேட்டியாளர்கள் காலில் திடீரென விழுந்து வணங்கினர். “நான் படம் நடிக்கிறேனோ இல்லையோ, நான் கூறும் இந்த வார்த்தை உங்கள் குடும்பத்திற்கும், உங்களுக்கும் எதோ ஒரு வகையில் உதவும் என்றால் எனக்கு மகிழ்ச்சியே, என்னோட வளர்ப்பு அப்படி, நான் டி.ஆர். வளர்த்த புள்ள, எஸ்.டி.ஆரோட நண்பன் நான் இப்படி தான் இருப்பேன்” என தன்னை பேட்டி காண வந்த அனைவர்க்கும் தன்னுடைய நெகிழ்ச்சியான வணக்கத்தை கூறியுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  தமிழகம் முழுவதும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வரும் ஜூலை 28-ம் தேதி வெளியாகிறது 'தி லெஜண்ட்' திரைப்படம்.

 

 

விளம்பரம்

 

 

விளம்பரம்

 

விளம்பரம்

Leave a Comment