“நான் ரொம்ப நல்லாருக்குனே…A special thanks உங்களுக்கு – சீயான் விக்ரம்”!!

வெளியிட்டது

"நான் ரொம்ப நல்லாருக்குனே...A special thanks உங்களுக்கு - சீயான் விக்ரம்"!! 1

திரை துறை மீது கொண்ட காதலால் பல வருடனால் போராடி வாய்ப்பு பெற்று வெற்றி பெற்றவர்கள் அதிகம். அண்ட் ஆசையில் கடைசி வரை வாய்ப்பு கிடைக்காமல் தோற்றுபோனவர்களும் அதிகம். ஆனால் அந்த முயற்சியில் வென்று இந்திய அளவில் பேசப்படும் மிக சிறந்த நடிகராக இருப்பவர் சீயான் விக்ரம். பின்னணியில் பிரபல நடிகர்கள் அஜித் மற்றும் பிரபுதேவாவிற்கு குரல் கொடுத்த இவர் தன்னுடைய வெற்றிக்காக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு. மலையாள மொழியை படங்களிலும் நடித்துள்ளார்.

முயன்று கொண்டே இருந்த இவருக்கு வெற்றியை அளித்த படம் “சேது’. இயக்குனர் பாலா அறிமுகமான இந்த படம் வெளியான முதல் வாரத்தில் சென்னையில் ஒரே ஒரு திரையரங்கில் மட்டுமே வெளியானது, ஆனால் அப்போது பிரபலமான ஆனந்த விகடனின் விமர்சனம் மூலம் படம் பெரிய வெற்றியை பதிவு செய்ய உதவியது.  இன்றளவும் பிரபலம். கிடைத்த வெற்றியை கெட்டியாக பிடித்து கொண்டு சியான் அடுத்தடுத்து படங்கள் மூலம் வெற்றியை கொடுக்க துவங்கினார். சேது படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட பெயரே சீயான்/ அந்த அப்படத்தின் வெற்றி இவரை இன்றளவும் சியானாகவே மக்களிடம் காட்டுகிறது.

தில், தூள், கிங், சாமீ, அருள், பிதாமகன், அந்நியன், கந்தசாமி, ஐ, இராவணன் போன்ற வெற்றிப்படங்கள் கொடுத்துள்ளார். அண்மையில் வெளியான இவருடைய “மகான்” படம் திரையரங்கில் வந்துஇருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர். அந்த படமும் அந்த அளவிற்கு சிறப்பான ஒரு படமாக அமைந்தது. இப்பொது இவர் கௌதம் வாசுதேவ் மேனனின் “துருவ நட்சத்திரம்”, அஜய் ஞானமுத்துவின் “கோப்ரா”, மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” மற்றும் பெயரிடிப்படாத பா.ரஞ்சித் படம் என அனைத்துமே சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார்.

இன்று தற்போது திடீரென உடல்நல குறைவால் அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலிக்காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என முதலில் கூறப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாகவே அவருக்கு என என்பதை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த போதிலும், அவருடைய மகனும் நடிகருமான துருவ விக்ரம் இது குறித்து விரிவாகி பேசி வீடியோ அன்று இரவே வெளியிட்டார். நடிகர் விக்ரம் இல்லாமலே அவருடைய மிகவும் எதிர்பார்க்கும் படமான “பொன்னியின் செல்வன் 1” படத்தின் டீஸர் 8ஆம் தேதி மாலை வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இப்பொது மருத்துவனையில் இருந்து வீடு திரும்பியுள்ள நடிகர் சீயான் விக்ரம் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “நிறைய அன்பும் பாசமும் கொடுத்தீங்க…ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு” என நன்றி கூறியுள்ளார். இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ நீங்களும் காண….

Video Courtesy – வாத்தி

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்