Categories: சினிமா

மீண்டும் ஃபார்மிற்கு திரும்பும் கமல்…மிரட்டும் விக்ரம் படத்தின் 20 வினாடி டீஸர்

வெளியிட்டது

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக ரயில்களில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் வரையப்பட்டு வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஃபார்மிற்கு திரும்பும் கமல்...மிரட்டும் விக்ரம் படத்தின் 20 வினாடி டீஸர் 1

இந்த நிலையில் இந்த படத்தின் மாஸ் வீடியோ ஒன்றை சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 20 நொடிகள் மட்டுமே இந்த வீடியோவில் இரண்டு பக்கமும் துப்பாக்கிகளால் சுடும் காட்சிகளும் தோட்டாக்கள் பறக்கும் காட்சிகளும் உள்ளன. மேலும் ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாக இன்னும் 25 நாட்களே உள்ளன என்ற தகவலும் இந்த வீடியோவில் உள்ளது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது தெரிந்ததே.

Courtesy -Raajkamal twitter handle

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்