“மதுர வீரன் கார்த்தியுடன் ரொமான்ஸ் செய்யும் ஷங்கரின் பொண்ணு”!! விருமன் படத்தின் பாடல் ப்ரோமோ”!!

வெளியிட்டது

நடிகர் கார்த்தியின் நடிப்பில் தற்போது ரிலீஸ்ஸிற்கு தயாராகி வரும் படம் “விருமன்”. கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கும் இந்த படத்தில் கார்த்தியுடன் ஜோடியாக முதல் முறை பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளை இப்பொது படக்குழு துவங்கியுள்ளது. Video given below.

"மதுர வீரன் கார்த்தியுடன் ரொமான்ஸ் செய்யும் ஷங்கரின் பொண்ணு"!! விருமன் படத்தின் பாடல் ப்ரோமோ"!! 1

ஏற்கனவே படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் படத்திலிருந்து மற்றொரு பாடல் “மதுர வீரன்” ப்ரோமோ வெளியாகியுள்ளது. கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் இருவரின் ரொமான்டிக் பாடலான இது இப்பொது சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிக்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் பாகம் வெளியிடும் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி உள்ளதால் அதன் ப்ரோமோஷன் வேலைகளும் நடைபெறத்துவங்கியுள்ளன. அதே போல “சர்தார்” படமும் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் வேலைகளில் விரைவில் துவங்கவுள்ளன.

விருமான் படத்தில் கார்த்தி, அதிதி சங்கர் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் முதலானோர் நடித்துள்ளனர். படத்தினை 2D நிறுவனம் சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் தயாரிக்க, இரண்டாவது முறையாக கார்த்தியை முத்தையா இயக்கியுள்ளார். படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Video Courtesy – Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்