Categories: சினிமா

மரண மாஸாக வெளியானது விஷால், மற்றும் SJ சூர்யா நடிக்கும் “மார்க் ஆண்டனி” First Look போஸ்டர்

வெளியிட்டது

நடிகர் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை வேற லெவல் லுக்கில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் உள்ளனர். திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் தான் மார்க் ஆண்டனி. இந்த படத்தில் விஷால் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தின் ஹீரோவான விஷாலின் பிறந்த நாள் அன்று படத்தின் அறிவிப்பை ஒரு போஸ்டருடன் வெளியிட்டு இருந்தது படக்குழு. அவன் இவன் படத்துக்கு பிறகு எந்த ஒரு கெட்டப் சேஞ்சும் செய்யாமல் ஒரே மாதிரியாகவே போலீஸ், மிலிட்டரி போன்ற கதாபாத்திரங்களில் மட்டுமே விஷால் நடித்து வருகிறார். கடைசியில் வெளியான லத்தி படத்தில் கூட போலீசாக தான் நடித்து இருந்தார் விஷால்.

மரண மாஸாக வெளியானது விஷால், மற்றும் SJ சூர்யா நடிக்கும் "மார்க் ஆண்டனி" First Look போஸ்டர் 1

 

இந்த நிலையில் தனது கெட்டப்பை மாற்றி சற்று வித்தியாசமாக நடிக்க விஷால் நினைத்திருக்கிறார் போலும். இந்த மார்க் ஆண்டனி படத்தில் ஒட்டு மீசை, தாடி, டோப்பா என வைத்து வித்தியாசமாக தோற்றமளிக்கிறார் விஷால்.விஷால் சமீபத்தில் தனது 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய பொது மார்க் ஆண்டனி படத்தின் அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டு இருந்தார். அந்த போஸ்டரை பார்த்த பலரும் விஷாலை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். போஸ்டர் மிக மோசமாக இருப்பதாகவும், இயக்குனர் உங்களை வைத்து செய்துவிட்டார் எனவும், இது மார்க் ஆண்டனி போஸ்டர் இல்லப்பா கைதி 2 போஸ்டர் என்று நெட்டிசன்கள் விஷாலை மரணமாக கலாய்த்து வந்தனர்.

மேலும் தற்போது எடுக்கப்படும் படங்களில் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு எதிரிகளை சுடுவது போல விஷாலும் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு சுடுவது போல் போஸ்டரில் இருப்பதால் உங்களுக்கும் இந்த துப்பாக்கி பைத்தியம் பிடித்து விட்டதா என்றும் ட்ரோல் செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று படத்தின் அதிகாரப்பூர்வ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை வேற லெவல் லுக்கில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் உள்ளனர். இந்த போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே சமயம் இது சுப்ரமணியபுரம் படம் போல உள்ளதாக சிலர் காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்